நடப்பாண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மகளிர் பிரீமியர் லீக் அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து மார்ச் 23 ஆம் தேதி ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் தொடங்கி மே மாத இறுதி வரை நடைபெறும் என்று தெரிவித்தார். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை தயாரிப்பு நடைபெற்று வருகிறது. மெகா ஏலம் முடிந்த நிலையில், பல்வேறு வீரர்கள் வெவ்வேறு அணிகளுக்கு மாறியுள்ளனர். இதனால், நடப்பாண்டு ஐ.பி.எல் தொடர் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.