துபே - ரானா - அஸ்வின் PT
T20

IND செய்தது நியாயமே இல்லை.. பின்நாளில் நமக்கே இது நடந்தால்? - ஹர்சித் ரானா விவகாரம் குறித்து அஸ்வின்

ஷிவம் துபேவுக்கு பதிலாக கன்கஷன் சப் வீரராக வந்த ஹர்சித் ரானா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு பங்காற்றியது பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

Rishan Vengai

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் சஞ்சு சாம்சன் 1, திலக் வர்மா 0 மற்றும் சூர்யகுமார் யாதவ் 0 என சொற்ப ரன்களில் வெளியேறினர். 12 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தபிறகு ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபேவின் அதிரடியான அரைசதத்தால் இந்திய அணி 20 ஓவரில் 181 ரன்களை குவித்தது.

dube

ஆனால் இரண்டாவது பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி கம்பேக் கொடுத்தது. பென் டக்கெட்டும், ஹாரி ப்ரூக்கும் அரைசதமடித்து அசத்த இங்கிலாந்து அணி 16 ஓவர்கள் வரை ஆட்டத்திற்குள் இருந்தது.

ஹர்சித் ரானா

ஆனால் ஷிவம் துபேவுக்கு பேட்டிங் செய்தபோது தலையில் அடிபட்டதால் கன்கஷன் சப் வீரராக களமிறங்கிய வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ரானா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு பெரிய பங்காற்றினார்.

ஒரு பேட்ஸ்மேனுக்கு மாற்றாக ஒரு பவுலர் களமிறங்கி ஆட்டத்தை மாற்றியது பேசுபொருளாக மாறியது, அதற்காக இந்திய அணியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்தியா செய்தது நியாயம் இல்லை..

ஒரு பேட்ஸ்மேனுக்கு தலையில் அடிபட்டால் அவருக்கு மாற்றுவீரராக ஒரு பேட்ஸ்மேன் தான் வரவேண்டுமே தவிர, ஒரு ஆல்ரவுண்டர் வரக்கூடாது. அதேபோல ஸ்குவாடில் ரமன்தீப் சிங் இருக்கும்போது, ஸ்குவாடிலேயே இல்லாத ஹர்சித் ரானாவை எப்படி களமிறக்கினார்கள் என்ற விமர்சனத்தை ரசிகர்கள் வைத்துவருகின்றனர்.

அஸ்வின்

இதுகுறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அஸ்வின், “ஹர்சித் ரானா, துபே விவகாரத்தில் இந்திய அணி செய்தது நியாயமே இல்லை. ஒருவீரர் தலையில் அடிபட்டு மைதானத்திலேயே இறந்தபிறகு தான், வீரர்களுக்கு தலையில் அடிபட்டால் அவர்களை பாதுகாக்க வேண்டுமென கன்கஷன் சப் விதிமுறை கொண்டுவரப்பட்டது. அப்படி ஒரு வீரருக்கு தலையில் அடிபட்டால், அவருக்கு மாற்றுவீரராக ஸ்குவாடில் இருக்கும் ஒருவரை தான் நீங்கள் விளையாட வைக்கவேண்டும். மாறாக தெருவில் செல்லும் ஒருவரை அழைத்துவந்து விளையாட சொல்ல கூடாது.

ஹர்சித் ரானா

அதுவும் ஸ்குவாடில் ரமன்தீப் இருக்கும் போது நீங்கள் ஒரு பவுலரான ஹர்சித் ரானாவை எப்படி எடுத்துவந்தீர்கள். இந்திய அணியே எங்களுக்கு ஹர்சித் ரானா வேண்டுமென்று கேட்டால் கூட, நீங்கள் எப்படி அதற்கு அனுமதியளித்தீர்கள். ஒரு இந்திய ரசிகராக இந்தியா வெற்றிபெற்றதில் நமக்கு மகிழ்ச்சி தான், ஆனால் பின்நாளில் இந்திய அணிக்கே இப்படி நடந்தால் என்ன செய்வது. அதனால் கன்கஷன் சப் விதிமுறையில் சரியான மாற்றத்தை கொண்டுவர வேண்டும்” என்று அஸ்வின் பேசியுள்ளார்.