rayudu - rohit sharma
rayudu - rohit sharma web
T20

"மரியாதையாக நடத்தும் வேறுஅணிக்கு ரோகித் சர்மா செல்வார்" - 2025 ஐபிஎல் வர்த்தகத்தை உறுதிசெய்த ராயுடு!

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன்சி பதவியிலிருந்து விலக்கப்பட்ட ரோகித் சர்மா, தற்போது ஒரு வீரராக மட்டுமே விளையாடிவருகிறார். கேப்டன்சி மாற்றத்தால் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவருக்கும் இடையே பிரச்னை இருந்துவருவதாகவும், அணியில் ஒற்றுமையில்லாமல் மும்பை அணி இரண்டு பிரிவுகளாக உடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் என்ன தான் ஒரு கடுமையான சூழலில் ரோகித் சர்மா இருந்தாலும், முடிந்தவரை மற்றவீரர்களுடன் ஜாலியாகவே இருந்துவருகிறார். சர்ச்சை அதிகமாக இருந்தபோதும் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட ரோகித் சர்மா ரசிகர்களின் விருப்பமான மும்பை வீரராக மாறியுள்ளார்.

Rohit - Hardik

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு ரோகித் சர்மா அடுத்தவருடம் நடக்கவிருக்கும் மெஹா ஐபிஎல் ஏலத்தில் வேறு அணிக்கு சென்றுவிடுவார் என்ற பேச்சு இருந்துவருகிறது. அதுகுறித்து பேசிய அம்பத்தி ராயுடு, எந்த அணிக்கு சென்றாலும் அவரை வாங்கிக்கொள்ள எல்லா அணிகளும் தயராகவே உள்ளன, ஆனால் எந்த அணிக்கு செல்லவேண்டும் என்பது அவருடைய முடிவு என்று கூறியுள்ளார்.

ரோகித்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ள LSG, SRH!

2025-ம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடக்கும் என ஐபிஎல் நிர்வாகம் உறுதிசெய்துள்ள நிலையில், தக்கவைக்கும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக 4 வீரர்கள் மட்டுமே தக்கவைக்கப்படும் நிலையில், பெரிய வீரர்களின் பெயர்கள் ஏலத்தில் போட்டிப்போட்டு வாங்கப்படும். ஒருவேளை ரோகித் சர்மா ஏலத்திற்கு வரும் பட்சத்தில், அவர் அதிக தொகைக்கு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. இல்லையேல் மறைமுகமாவும் வர்த்தகம் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.

rohit sharma

ரோகித் சர்மாவின் வர்த்தகம் குறித்து பேசிய அம்பத்தி ராயுடு, “எந்த அணிக்கு செல்லவேண்டும் என்பது இறுதியில் ரோகித்தின் முடிவு. ஆனால் எந்த அணிக்கு சென்றாலும் அவரை ஒருவீரராகவும், கேப்டனாகவும் ஏற்றுக்கொள்ள எல்லா அணிகளும் விரும்புவார்கள். மும்பையை விட தன்னை மரியாதையாக நடத்தும் அணிக்கு ரோகித் நிச்சயம் செல்வார். ஆனால் முடிவு அவருடையது” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் அம்பத்தி ராயுடு பேசியுள்ளார்.

இதற்கு முன் ரோகித் குறித்து கருத்து தெரிவித்திருந்த ராயுடு, “தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணியை ரோகித் சர்மா வழிநடத்தவேண்டும்” என்று தெரிவித்திருந்தார். முதலில் சிஎஸ்கே அல்லது ஆர்சிபி அணிகளுக்கு ரோகித் செல்ல வாய்ப்பிருக்கிறது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது LSG பயிற்சியாளர் ரோகித்தை அணிக்கு கொண்டுவருவதற்கான கேள்விக்கு பாசிட்டாவாக பேசியுள்ளார். அதேபோல சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.