rcb, sa x page
T20

நீண்ட நாள் கனவு.. கோப்பையைத் தட்டித் தூக்கிய 5 அணிகள்!

வாழ்க்கையில் தோற்றவர்கள் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது... அவர்களுக்கும் காலம் வரும் என்று சொல்வார்கள்...விளையாட்டு உலகில் இந்தாண்டு அது நிஜமாகி உள்ளது. எப்படி என்பதை பார்க்கலாம்.

PT WEB

வாழ்க்கையில் தோற்றவர்கள் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது... அவர்களுக்கும் காலம் வரும் என்று சொல்வார்கள்...விளையாட்டு உலகில் இந்தாண்டு அது நிஜமாகி உள்ளது. எப்படி என்பதை பார்க்கலாம். இப்போது திறமை மிக்க அணி என பெயரெடுத்தாலும் கோப்பையை வெல்லும் வாய்ப்ப்பை மட்டும் இழந்துகொண்டே இருந்த தென்னாப்ரிக்கா சவாலான மிக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வென்றுள்ளது.

rcb

27 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத தாகம் தற்போது தணிந்துள்ளது. ஐபிஎல்லில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அளவுக்கு மிக அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தாலும் கெய்ல், டிவில்லியர்ஸ் போன்ற பல ஜாம்பவான் வீரர்களை கொண்டிருந்தாலும் ஆர்சிபி அணிக்கு கோப்பை வாய்ப்பு 18 ஆண்டுகளாக நழுவிக்கொண்டே வந்தது. ஆனால் இந்த ஆண்டு அந்த பெருங்கனவு நனவாகியுள்ளது. எத்தனையோ சிறப்புகளை பெற்றிருந்தாலும் ஐபிஎல்லை மட்டும் சுவைக்காமல் இருந்த விராட் கோலிக்கும் இந்தாண்டு கோப்பை வசப்பட்டுள்ளது. உலகெங்கும் பிரபலமான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இந்தாண்டு பிஎஸ்ஜி அணி கோப்பையை கையில் ஏந்தியுள்ளது. பல ஆண்டு காத்திருப்புக்கு முன் முதன்முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை பிஎஸ்ஜி வென்றெடுத்துள்ளது.

sa

யூரோப்பா லீக் கால்பந்து தொடரில் 17 ஆண்டுகளுக்கு பின் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி மகுடம் சூடியுள்ளது. பிக் பாஷ் கிரிக்கெட் தொடரில் 12 சீசன்களுக்கு பிறகு ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி பட்டம் வென்றுள்ளது. வாழ்க்கையில் எந்த சூழலிலும் நம்பிக்கை அவசியம் என்பதை இந்தாண்டு பல விளையாட்டு தொடர்களின் முடிவுகள் மனிதகுலத்திற்கு உணர்த்துவதாக உள்ளது.