சல்மான் ஆஹா x
விளையாட்டு

சோத்துலையும் அடி.. சேத்துலையும் அடி! பாகிஸ்தானிடம் மீண்டும் சரணடைந்த இலங்கை!

இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதும் 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட முத்தரப்பு தொடர் நடைபெறுகிறது.

Rishan Vengai

பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியாக தோல்வி சந்தித்த இலங்கை அணி, 7 முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் சுருண்டது. சல்மான் ஆஹாவின் சதம் பாகிஸ்தானின் வெற்றியை உறுதிசெய்தது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி, உலகக்கோப்பைக்கு முன்னதாக 7 அடங்கிய முத்தரப்பு தொடரில் விளையாடுகிறது. இதில் பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கின்றன.

முதல் போட்டி பாகிஸ்தான் ராவல்பிண்டி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிலையில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி சல்மான் ஆஹாவின் சதத்தின் உதவியால் 305 ரன்கள் சேர்த்தது. 90 பந்தில் 10 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்த சல்மான் ஆஹா 107 ரன்கள் விளாசினார்.

306 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இலங்கை அணி, 268 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்த தோல்விக்கு முன்னதாக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இலங்கை அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 2-1 என தோல்வியை சந்தித்திருந்தது. சமீபத்தில் நன்றாக செயல்பட்டுவந்த இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது.