விளையாட்டு

“சில நேரங்களில் இப்படி அநீதி நடப்பதுண்டு” - புஜாரா அவுட்டை மேற்கோள்காட்டி ட்வீட்

“சில நேரங்களில் இப்படி அநீதி நடப்பதுண்டு” - புஜாரா அவுட்டை மேற்கோள்காட்டி ட்வீட்

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்தது. தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 290 ரன்களை பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்திய அணிக்காக புஜாராவும், பண்டும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். 

புஜாரா 143 பந்துகளில் 73 ரன்களை குவித்த்திருந்தார். இங்கிலாந்து அணியின் டாம் பெஸ் வீசிய சுழற்பந்தை புஜாரா புள் ஷாட் ஆட முயன்ற போது, அவர் அடித்த பந்து ஷார்ட் லெக் ஃபீல்டரின் இடது தோள்பட்டையில் பட்டு மிட் விக்கெட் திசைக்கு சென்றது. அதை அங்கு ஃபீல்ட் செய்த பேர்ன்ஸ் கேட்ச் பிடிக்க புஜாரா தனது விக்கெட்டை இழந்தார். இது இங்கிலாந்து அணியின் அதிர்ஷ்டம் என சொல்லப்படுகிறது. 

இந்த காட்சியை மேற்கோள் காட்டி “சில நேரங்களில் வாழ்க்கையில் இப்படி அநீதி நடப்பதுண்டு” என ட்வீட் செய்துள்ளார் Chloe - Amanda Bailey.