விளையாட்டு

ஆப்கானிஸ்தானில் குடும்பம் சிக்கியுள்ளதால் ரஷித் கான் கவலையில் இருக்கிறார் : பீட்டர்சன்

EllusamyKarthik

தலிபான் படையினர் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் அந்த நாட்டின் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தனது குடும்பத்தை ஆப்கானிஸ்தானிலிருந்து உடனடியாக வெளியேற்ற முடியாத சூழலினால் கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன். 

“ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்போதையை சூழல் குறித்து பவுண்டரி லைனில் நானும், ரஷிதும் நீண்ட நேரம் உரையாடினோம். தனது நாட்டின் நிலையை குறித்து வருத்தப்படும் அவர், தனது குடும்பத்தை அங்கிருந்து வெளிக்கொண்டு வர முடியாத கவலையும் மூழ்கியுள்ளார். இந்த மாதிரியான சூழலில் கிரிக்கெட் விளையாட்டில் கவனம் செலுத்தி, அதில் சிறப்பாக ஆடுவது மிகவும் சவாலான காரியம். அவரது கதை மனதை உருக்கும் கதைகளில் ஒன்றாக உள்ளது” என கமெண்டரி பாக்ஸில் அமர்ந்தபடி பீட்டர்சன் தெரிவித்துள்ளார். 

ரஷித் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ‘தி ஹன்ட்ரட்’ தொடரில் டிரண்ட் ராக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். மேன்செஸ்டர் அணிக்கு எதிராக 20 பந்துகள் வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதில் 11 டாட்களும் அடங்கும்.