Pele  web
விளையாட்டு

ரூ.5.7 கோடி.. ஏலத்திற்கு வரும் பீலேவின் 1958 ஜெர்சி!

பீலே 1958 உலகக் கோப்பை இறுதியில் அணிந்த வரலாற்று 10-ஆம் எண் ஜெர்சி ஏலத்திற்கு வந்துள்ளது.

PT WEB

1958 உலகக் கோப்பை இறுதியில் 17 வயதில் ஸ்வீடனுக்கு எதிராக 2 கோல்கள் அடித்து பிரேசிலுக்கு முதல் பட்டத்தைத் தந்த பீலே அணிந்த 10-ஆம் எண் ஜெர்சி ஏலத்திற்கு வருகிறது. சோத்பீஸ் நிறுவனம் நடத்தும் இந்த ஆன்லைன் ஏலம் ஜூலை 16 வரை நடைபெறுகிறது. 5.7 கோடி ரூபாய் வரை விலை எட்டும் என மதிப்பிடப்படுகிறது.

கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலே, 1958-ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அணிந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 10-ஆம் எண் ஜெர்சி ஏலத்திற்கு வந்துள்ளது. அப்போட்டியில் ஸ்வீடனுக்கு எதிராக 17 வயதான பீலே 2 கோல்களை அடித்து பிரேசிலுக்கு முதல் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தார். புகழ்பெற்ற ‘சோத்பீஸ்’ (Sotheby's) நிறுவனம் நடத்தும் இந்த ஆன்லைன் ஏலம் கடந்த 29 ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 16 வரை தேதி நடைபெறுகிறது . இந்த ஏலத்தில் பீலேவின் ஜெர்சி 5 . 7 கோடி ரூபாய் அளவுக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

pele

இந்த ஜெர்சி, பீலே தனது முதல் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அணிந்திருந்ததாகும். ஸ்டாக்ஹோமில் உள்ள ராசுண்டா மைதானத்தில், போட்டியை நடத்திய ஸ்வீடன் அணிக்கு எதிராக பிரேசில் 5-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றபோது, ​​இரண்டு கோல்களை அடித்த பீலேவுக்குஅப்போது 17 வயது மட்டுமே. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோல் அடித்த மிக இளம் வயது வீரர் என்ற சாதனை இன்றும் அவரிடமே உள்ளது.

டிசம்பர் 2022-ல் குடல் புற்றுநோயால் தனது 82-வது வயதில் காலமான பீலே, அந்த இறுதிப் போட்டிக்குப் பிறகு, கையால் தயாரிக்கப்பட்ட அந்தச் சட்டையைத் தனது அறைத் தோழரும் சக வீரருமான டிடாவுக்குப் பரிசாக அளித்தார். பல தசாப்தங்களாக டிடாவின் குடும்பத்தினரிடம் இருந்த இந்தச் சட்டை, பின்னர் பிரேசிலிய அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது; இறுதியாக 2004-ல், பெயர் வெளியிட விரும்பாத தற்போதைய உரிமையாளரால் இது வாங்கப்பட்டது.