ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார். போட்டி முடிந்த பிறகு விராட் செய்த ரியாக்ஷனும் அதற்கு அவரது மனைவி அனுஷ்கா சோசியல் மீடியாவில் பகிர்ந்த போட்டோவும் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது .
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் 15 ரன்களை எடுத்த விராட் கோலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
ODI கிரிக்கெட்டில் 14,000 ரன்களை எட்டிய இரண்டு வீரர்களாக இதுவரை சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்கக்கரா இருவரும் இருந்தாலும், 300 இன்னிங்ஸ்களுக்கு குறைவாக விளையாடி இந்த மைல்கல்லை எட்டிய ஒரே வீரராக விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பேட்டிங்கை தாண்டி தன்னுடைய அபாரமான ஃபீல்டிங்கிலும் புதிய சாதனையை படைத்து அசத்தியுள்ளார் விராட் கோலி.
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இரண்டு கேட்ச்களை பிடித்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் ஃபீல்டராக அதிக கேட்ச்களை பிடித்த இந்திய வீரராக மாறி மற்றொரு சாதனை படைத்துள்ளார். போட்டியின் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் ஆடிய விராட் கோலி, 111 பந்துகளில் சதம் அடித்தார். அதற்கு பிறகு விராட் கோலி அங்கிருந்த கேமராவை பார்த்து கண்ணடித்துள்ளார்.
இது அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்காக கோலி செய்துள்ளார் எனவும் ரசிகர்களால் பேசப்பட்டு வந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து எமோஜிகளுடன் பதிவிட்டுளளார் அனுஷ்கா ஷர்மா. பிசிசிஐ-ன் புதிய விதிமுறைகளால் கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தார் போட்டிகளில் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.