விளையாட்டு

ஐபிஎல் மெகா ஏலம்: நிதிஷ் ராணாவை தக்கவைத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

EllusamyKarthik

இளம் இடது கை பேட்ஸ்மேனான நிதிஷ் ராணாவை 8 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஆல்-ரவுண்டரான இவர் எந்தவிதமான பேட்டிங் ஆர்டரிலும் இறங்கி விளையாடும் திறன் படைத்தவர். 77 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1820 ரன்கள் எடுத்துள்ளார் அவர். 

2015 முதல் ஐபிஎல் களத்தில் அவருக்கு விளையாடிய அனுபவம் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் அவரது பயணம் தொடங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கடந்த 2018 முதல் அவர் விளையாடி வருகிறார். ஸ்விட்ச் ஹிட் அடிப்பதில் இவர் வல்லவர். 

இவரை ஏலத்தில் எடுக்க பெரும்பாலான அணிகள் போட்டா போட்டி போட்டிருந்தன.