Snehal Shinde with her father
Snehal Shinde with her father file image
விளையாட்டு

‘கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு? உனது புன்னகை போதுமடி..’ பதக்கத்தோடு வந்த மகள்... நெகிழ்ந்த தந்தை!

யுவபுருஷ்

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய போட்டிகளில் கபடிப் பிரிவில் பங்கேற்று விளையாடிய இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியது. கடைசி நொடி வரை சீன அணியுடன் போராடிய இந்திய அணி 26 - 25 என்ற கணக்கில் வெற்றியை தனதாக்கியது. இந்நிலையில், அணியில் பங்கேற்ற வீராங்கனை சினேகால் ஷிண்டே என்பவர், தன் சொந்த ஊரான மகாராஷ்டிராவுக்கு விமானத்தில் திரும்பினார். புனே வந்த அவரை வரவேற்பதற்காக அவரது தந்தை ஏர்ப்போர்ட்டில் காத்திருந்தார்.

வெற்றியுடன் திரும்பிய மகளை வரவேற்ற அந்த தந்தை, ஆரத்தழுவி ஆனந்த கண்ணீருடன் மகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது தந்தையும், மகளும் ஒருவருக்கு ஒருவர் பேச முடியாமல் நாதழுதழுக்க அன்பை பரிமாறிக்கொண்டனர்.

தனது மகள் வென்ற பதக்கத்தையும் பத்திரிகையாளர் முன்பெருமையாக காட்டினார் தந்தை பிரதீப் ஷிண்டே. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.