விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை: வங்கதேச அணிக்கு 230  ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா!

மகளிர் உலகக் கோப்பை: வங்கதேச அணிக்கு 230  ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா!

EllusamyKarthik

நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 229 ரன்களை எடுத்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். 

முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் இந்திய அணியின் தொடக்க ஆட்ட வீராங்கனைகளான ஷெஃபாலி வெர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா. யாஸ்திகா பாட்டியா 50 ரன்கள் பதிவு செய்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்களை எடுத்தது. 

230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேச அணி விரட்டி வருகிறது. ஆறாவது ஓவரின் முதல் பந்தில் அந்த அணியின் ஷர்மின் அக்தர் 5 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்து சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை உயிர்ப்போடு வைத்திருக்க முடியும். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி வருகிறது. அதனால் இந்திய அணி இந்த தொடரில் விளையாடுகின்ற எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றாக வேண்டும். அடுத்ததாக இந்திய அணி வரும் 27-ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியுடன் பலப்பரீட்சை செய்கிறது.