Hockey web
விளையாட்டு

ஹாக்கி | AUS எதிரான போட்டி.. இந்திய மகளிர் அணி அசத்தல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்தியா மகளிர் அணி போராடி வெற்றி பெற்றது.

PT WEB

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி, அந்நாட்டு மகளிர் அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி போராடி வெற்றி பெற்றது.

-செ.யுகேஷ்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான முதல் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, 2ஆவது போட்டி பெர்த்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஒலிவியா டவுன்ஸ்சும் (10-வது நிமிடம்) மற்றும் இந்தியா அணி சார்பில் சுஷிலா சானு புக்ராம்பும் (46-வது நிமிடம்) கோல் அடித்தனர். இதைத்தொடர்ந்து பெனால்டி ஷூட்-அவுட் முறை மூலமாக 4-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்து தொடரில் சமநிலையை எட்டியது. 3-ஆவது போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், அதில் வெற்றி பெற்று இந்திய மகளிர் அணி முன்னிலை பெறும் என ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.