hand of god goal web
கால்பந்து

ஏலத்திற்கு வரும் 'Hand Of God' சர்ச்சை பந்து.. 77 கோடி வரை ஏலம் போக வாய்ப்பு!

1986 உலகக்கோப்பையில் மரடோனாவின் கைகளால் அடிக்கப்பட்ட 'Hand Of God' கோல் என்று அழைக்கப்படும் கால்பந்து விலைக்கு வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

1986 உலகக்கோப்பை காலிறுதியில் மரடோனாவின் சர்ச்சைக்குரிய ‘கடவுளின் கை கோல்’ அடிக்கப்பட்ட பந்து ஹெரிட்டேஜ் நிறுவனம் மூலம் ஏலத்திற்கு வருகிறது. நடுவரிடம் பாதுகாப்பாக இருந்த இந்த வரலாற்றுப் பந்தின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 21 கோடி ரூபாயில் தொடங்கும் இந்த ஏலம், அதிகபட்சம் 77 கோடி வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1986ஆம் ஆண்டு உலகக்கோப்பையானது இங்கிலாந்து-அர்ஜெண்டினாவின் காலிறுதி மோதலில் ஒரு அழிக்கமுடியாத நிகழ்வை விட்டுச்சென்றது. அர்ஜெண்டினாவின் ஜாம்பவனான மரடோனா சர்ச்சைக்குரிய ’கடவுளின் கை கோல்’-ஐ அடித்தது அந்தப்போட்டியில் தான். அவர் கையால் தட்டிவிட்ட கோல் தற்போதைய VAR அம்சம் இல்லாததால் நடுவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. போட்டிக்குப் பிறகு அந்த கோல் குறித்து பேசிய மரடோனா, 'மரடோனாவின் தலையாலும், கடவுளின் கையாலும்’ அடிக்கப்பட்டது என்று கூறியது வரலாற்றில் அழியாத சம்பவமாக பதிவானது. அதனாலேயே அந்த கோல் ‘Hand of God Goal' நினைவுகூறப்படுகிறது.

இந்தசூழலில் 1986ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மரடோனா கைகளால் கோல் அடித்து வரலாற்றுப் புகழ்பெற்ற பந்தை ஹெரிட்டேஜ் நிறுவனம் ஏலம் விட உள்ளது. இதன் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் 21 கோடி ரூபாய் ஆகும். இது அதிகபட்சமாக 77 கோடி ரூபாய் வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுவரிடம் பத்திரமாக இருந்த இப்பந்தின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள நிலையில், இந்த மாத இறுதியில் வரலாற்றுப் புகழ்பெற்ற பந்தின் ஏலம் நிறைவடைகிறது.