ஜார்ஜினா, ரொனால்டோ  இன்ஸ்டா
கால்பந்து

8 வருட டேட்டிங்.. 5 குழந்தைகள்.. ரொனால்டோ - ஜார்ஜினாவின் நிச்சயதார்த்த மோதிரம் சொல்வது என்ன?

ஐந்து குழந்தைகள் மற்றும் 8 வருட டேட்டிங்கிற்குப் பிறகு, இறுதியாக கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரது நீண்டகால துணைவி, மாடல் ஜார்ஜினா ரோட்ரிக்ஸை நிச்சயதார்த்தம் செய்துள்ளதாகப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

ரொனால்டோ - ஜார்ஜினாவின் நிச்சயதார்த்த மோதிரம் குறித்த பதிவு

போர்த்துகீசிய கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். தவிர, யூடியூப் சேனலைத் தொடங்கி, தன்னை ஃபாலோ செய்வோரின் எண்ணிக்கையையும் மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளார். இந்த நிலையில், ஐந்து குழந்தைகள் மற்றும் 8 வருட டேட்டிங்கிற்குப் பிறகு, இறுதியாக கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரது நீண்டகால துணைவி, மாடல் ஜார்ஜினா ரோட்ரிக்ஸை நிச்சயதார்த்தம் செய்துள்ளதாகப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த புகைப்படத்தை, ஜார்ஜினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "ஆம், எனக்கும் தெரியும். இதில் மற்றும் என் வாழ்நாள் முழுவதும்" என ஸ்பானிஷ் மொழியில் தலைப்பிடப்பட்டுள்ளது.

மோதிரம் பற்றிய குறிப்புகள்

ஜார்ஜினாவின் நிச்சயதார்த்த மோதிரம் ஒரு ஓவல்-வெட்டு மையக் கல்லையும் இரண்டு பக்கக் கற்களையும் கொண்டுள்ளது. கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் ஒரு பெரிய மோதிரத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பிறகு, அவர்களின் நிச்சயதார்த்தம் குறித்த புதிய வதந்திகள் கிளம்பியுள்ளன. 2016 முதல் ஒன்றாக இருக்கும் இந்த ஜோடி, இந்தச் செய்தியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பக்கம் ஆறின் அறிக்கையின்படி, மோதிரத்தின் விலை டாலர் 2 முதல் டாலர் 5 மில்லியன் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த மோதிரத்தின் மையக் கல் D நிறத்திலும், குறைபாடற்ற தெளிவிலும், 30 காரட்களுக்கு மேல் எடையுள்ளதாகவும் இருக்கும் என்று ரேர் காரட்டின் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் ஆனந்த் மதிப்பிட்டதாக அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது. லோரல் டயமண்ட்ஸின் நிச்சயதார்த்த மோதிர நிபுணரான லாரா டெய்லர், மையக் கல் 15 முதல் 20 காரட் வரை எடையுள்ளதாக மதிப்பிட்டுள்ளார்.

ரொனால்டோ மற்றும் ஜார்ஜினா காதல் கதை

கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸின் காதல் கதை என்பது நீண்ட வருடங்கள் தொடர்புடையது. கடந்த 2016ஆம் ஆண்டு கடையில் ஒன்றில் ஜார்ஜினா வேலை பார்த்து வந்தார். அப்போது ரொனால்டோ, அவரை முதல்முறையாகச் சந்தித்தார். ரோட்ருகஸின் நெட்ஃபிக்ஸ் தொடரான ’ஐ ஆம் ஜார்ஜினா’வில், தம்பதியினர் தங்கள் ஆரம்ப நாட்களின் விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர். அதில், ரொனால்டோ முதலில் அப்போதைய குஸ்ஸி கடை உதவியாளர் ஜார்ஜினாவை எப்படிச் சந்தித்தார் என்பதை நினைவு கூர்ந்தார்.

cristiano ronaldos and georgina

பின்னர், இந்த ஜோடி ஜனவரி 2017இல் சூரிச்சில் நடைபெற்ற சிறந்த FIFA கால்பந்து விருது நிகழ்வுகளின்போது முதல் முறையாக ஒன்றாகப் பங்கேற்றனர். பின்னர் அந்த ஆண்டு மே மாதம் Instagramஇல் பொதுவில் புகைப்படங்களைப் பகிர்ந்தனர். அடுத்து, ஜூன் 2017இல், அவர்கள் வாடகைத் தாய் மூலம் இரட்டையர்கள் பிறந்ததாக அறிவித்தனர். தற்போது அவர்கள் ஐந்து குழந்தைகளைக் கொண்ட தம்பதிகளாக வலம் வருகின்றனர். எட்டு வயது இரட்டையர்கள் ஈவா மரியா மற்றும் மேடியோ, ஏழு வயது மகள் அலானா, மூன்று வயது பெல்லா, மற்றும் முந்தைய உறவில் பிறந்த ரொனால்டோவின் மூத்த மகன் கிறிஸ்டியானோ ஜூனியர் (15) ஆகியோர் அவர்களின் குழந்தைகளாக உள்ளனர்.