2034 FIFA World Cup be held in Saudi Arabia  pt desk
கால்பந்து

2034-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி - சவுதி அரேபியாவுக்கு வாய்ப்பு வழங்கிய FIFA

2034-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த சவுதி அரேபியாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

PT WEB

விளையாட்டுப் போட்டித் தொடர்களில் முதன்மையானதாக கருதப்படும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை 2034 ஆம் ஆண்டு நடத்தும் பெருமை சவுதி அரேபியாவுக்கு கிட்டியதைத் தொடர்ந்து, தலைநகர் ரியாத்தில் கொண்டாட்டங்கள் களைகட்டின. அங்கு நடைபெற்ற இசைத் திருவிழாவில் பிரேசிலைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் நெய்மர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FIFA

வாணவேடிக்கைகள் நகரெங்கும் நடந்தன. உலகக ;கோப்பை வரலாற்றில் சிறந்த போட்டித் தொடரை தாங்கள் நடத்தவுள்ளதாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த முன்னாள் வீரர் யாசர் அல் கத்தானி தெரிவித்தார். ஷமத்திய கிழக்கு ஆசியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் இரண்டாவது நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது சவுதி அரேபியா.

2022-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை கத்தார் நடத்திய நிலையில், 12 ஆண்டுகளுக்குக்குப் பிறகு, சவுதி அரேபியா இந்த பெருமையை பெறவுள்ளது.