விளையாட்டு

43 பந்துகளில் 103 ரன்களை சேர்த்து அதிரடி காட்டிய இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டன்

EllusamyKarthik

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டன் 43 பந்துகளில் 103 ரன்களை சேர்த்து அதிரடி காட்டினார்.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் லியம் லிவிங்ஸ்டன் 43 பந்துகளில் 103 ரன்களை சேர்த்து அதிரடியாக விளையாடினார். அதன்மூலம் சில தனிப்பட்ட சாதனைகளையும் இங்கிலாந்து பேட்ஸ்மேனாக அவர் படைத்துள்ளார். 

இந்த அதிரடி இன்னிங்ஸ் மூலம் அதிவேகமாக அரைசதம் மற்றும் சதம் விளாசிய இங்கிலாந்து பேட்ஸ்மேனாகியுள்ளார். 17 பந்துகளில் அரைசதமும், 42 பந்துகளில் சதமும் விளாசினார். அதோடு ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்சர் அடித்த இங்கிலாந்து பேட்ஸ்மேனாகவும் அவர் சாதனை படைத்துள்ளார். மொத்தம் 9 சிக்ஸர்களை நேற்றைய ஆட்டத்தில் விளாசி இருந்தார் அவர். 

இருப்பினும் இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது.