ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.
முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 2-1 எனவும், ஒருநாள் தொடரில் 2-0 எனவும் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கியுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியானது நேற்று தொடங்கிய நிலையில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அபாரமான விளையாடிய ஜிம்பாப்வே வீரர் சீன் வில்லியம்ஸ் 154 ரன்கள் குவித்து அசத்தினார்.
அதற்குபிறகு பேட்டிங் வந்த கேப்டன் எர்வின் மற்றும் பென்னட் இருவரும் தங்களுடைய பங்கிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மாறி மாறி சதங்களாக அடித்து அசத்தினர்.
சீன் வில்லியம்ஸ் 154 ரன்கள், எர்வின் 104 ரன்கள், பென்னட்110* ரன்கள் என எடுக்க முதல் இன்னிங்ஸில் 586 ரன்களை சேர்த்துள்ளது ஜிம்பாப்வே (இரண்டாம் நாளில்).
அதனைத்தொடர்ந்து விளையாடிவரும் ஆப்கானிஸ்தான் 3 ரன்னுக்கே முதல் விக்கெட்டை இழந்தது. 14 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்து ஆப்கான் விளையாடிவருகிறது.