சாஹல், தனஸ்ரீ வர்மா எக்ஸ் தளம்
கிரிக்கெட்

முன்னாள் மனைவி வைத்த குற்றச்சாட்டு.. மவுனம் கலைத்த யுஸ்வேந்திர சாஹல்!

தனது முன்னாள் மனைவி தனஸ்ரீ வர்மா கூறிய கருத்துக்கு கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் இறுதியாக தனது மௌனத்தைக் கலைத்துள்ளார்.

Prakash J

தனது முன்னாள் மனைவி தனஸ்ரீ வர்மா கூறிய கருத்துக்கு கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் இறுதியாக தனது மௌனத்தைக் கலைத்துள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான யுஸ்வேந்திர சாஹலும், மருத்துவர் மற்றும் நடன இயக்குநருமான தனஸ்ரீயும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில், இவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதைத் தொடர்ந்து நடப்பாண்டு பிப்ரவரி மாதம் நீதிமன்றம் மூலம் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். எனினும், அவர்களுடைய பிரிவு பற்றிய செய்திகள் அவ்வப்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில், தனது முன்னாள் மனைவி தனஸ்ரீ வர்மா கூறிய கருத்துக்கு கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் இறுதியாக தனது மௌனத்தைக் கலைத்துள்ளார்.

சாஹல், தனஸ்ரீ வர்மா

“'ரைஸ் அண்ட் ஃபால்' நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் தனஸ்ரீ, குப்ரா சேட்டுடனான உரையாடலின்போது, ​​திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு சாஹல் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறியிருந்தார். அப்போது பேசிய அவர், "சஹாலுடன் திருமணம் ஆன இரண்டு மாதத்திலேயே இந்த உறவு நீடிக்காது என்று கண்டுபிடித்துவிட்டேன். அவர் என்னை ஏமாற்றுகிறார் என்று இரண்டு மாதத்திலேயே தெரிந்துவிட்டது. திருமண உறவு நீடிக்க வேண்டும் என்று கொஞ்சம் நான் பொறுமையாக இருந்தேன்" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனஸ்ரீ குற்றச்சாட்டு குறித்து பேசிய சாஹல், "நான் ஒரு விளையாட்டு வீரன். நான் ஏமாற்றவில்லை. நான் ஏமாற்றியதை நீங்கள் 2ஆவது மாதத்திலேயே கண்டுபிடித்திருந்தால் அந்த உறவு எப்படி நீடிக்கும்? எனக்கு, இந்த அத்தியாயம் முடிந்துவிட்டது. நான் இதனை கடந்து முன்னேறிச் செல்கிறேன். நான் மீண்டும் இதைப் பற்றிப் பேச விரும்பவில்லை. நான் என் வாழ்க்கையிலும் என் விளையாட்டிலும் கவனம் செலுத்தவுள்ளேன்" என்று தெரிவித்தார்