உலகக்கோப்பை இறுதிப்போட்டி
உலகக்கோப்பை இறுதிப்போட்டி முகநூல்
கிரிக்கெட்

உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணி முதலில் பேட்டிங்!

PT WEB

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது

பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரீட்சை மேற்கொள்ளஇருக்கின்றன.

குஜராத்தின் அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் போட்டியை, பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லசும் நேரில் கண்டுகளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்திய விமானப்படையின் சூரிய கிரண் குழுவினர் சாகசங்களை மேற்கொள்ள உள்ளனர். போட்டியின் இடைவேளைகளின் போதும் பிரபல கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இருநாட்டு வீரர்களும் இந்த உலகக்கோப்பையை கைப்பற்றிவிடவேண்டும் என முனைப்புடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த போட்டி, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இரு அணிகளிலும் எவ்வித மாற்றமும் இல்லை. அரையிறுதிப் போட்டியில் விளையாடிய அதே அணிதான் விளையாடுகிறது.

இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் கடைசியாக 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியிருந்தது. இந்த முறை இந்தியா கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.