harmanpreet haur, lara wolwart x page
கிரிக்கெட்

மகளிர் உலகக் கோப்பை.. இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் 10வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Prakash J

8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் 10வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை மற்றும் இந்தியாவில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று நடைபெறும் 10வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி இன்று மாலை 3 மணிக்கு தொடங்க உள்ளது. மகளிர் உலகக்கோப்பை தொடரில், இதுவரை தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ள இந்தியா, புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடங்களில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் உள்ளன.

harmanpreet haur

அதேநேரத்தில், தென்னாப்பிரிக்கா அணி 5வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து, தொடரில் சிறப்பான ஆதிக்கத்தைச் செயல்படுத்தி வரும் இந்திய அணி, இன்றையப் போட்டியிலும் தனது வெற்றிப் பயணத்தைத் தொடரவும் ஆதிக்கத்தைத் தக்கவைக்கவும் முயற்சிக்கும். அணியின் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பிரதிகா ராவால், ஹர்லீன் தியோல், ரிச்சா கோஷ் உள்ளிட்டோரும் இருப்பது அணிக்கு பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம், பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ரேனுகா சிங், தீப்தி சர்மா, ஸ்நே ரானா, கிரந்தி கவுட், ஸ்ரீ சாரணி ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். இதனால் இந்திய மகளிர் அணி ஹாட்ரிக் வெற்றியை நிச்சயம் பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில், தென்னாப்பிரிக்கா தனது சமீபத்திய எழுச்சியைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, தங்களுடைய முதல் லீக் போட்டியில் இங்கிலாந்திடம் படுதோல்வியைச் சந்தித்தது. ஆனால் அந்த தோல்வியில் இருந்து மீண்ட அந்த அணி, அடுத்த போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அபார வெற்றியைப் பதிவு செய்த உத்வேகத்துடன் இந்த போட்டியை எதிர்கொள்கிறது. அணியின் பேட்டிங்கில் தஸ்மின் பிரிட்ஸ் சுனே லஸ், லாரா வோல்வார்ட், அன்னேக் போஷ் உள்ளிட்டோரும், பந்துவீச்சில் மரிஸான் கேப், சோளே டிரையான், அயபோங்கா காக்கா, நோன்குலுலேகோ மலாபா, அன்னேரி டெர்க்சன் உள்ளிட்டோரும் இருப்பது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது.

lara wolwart

இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால், இந்த மோதல் உலகக் கோப்பை தரவரிசையை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் ஒருநாள் போட்டிகளில் 33 முறை மோதியுள்ளன, அதில் இந்தியா 20 வெற்றிகளுடன் தெளிவான ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. வி.டி.சி.ஏ கிரிக்கெட் மைதானம் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.