INDW vs PAKW web
கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக்கோப்பை| இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை.. நேருக்கு நேர் மோதல் விவரம்!

2026 மகளிர் டி20 உலகக்கோப்பையின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Rishan Vengai

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெறும் 10ஆவது மகளிர் டி20 உலகக்கோப்பையில், குருப் ஏவில் உள்ள இந்தியா, பாகிஸ்தானை இன்று எட்ஜ்பாஸ்டனில் எதிர்கொள்கிறது. 24 நாட்கள், 33 ஆட்டங்கள் நடைபெறும் இந்தத் தொடரில், இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நல்ல பவுன்ஸ், வேகத்துடன் இருக்கும் மைதானத்தில், முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 145 ரன்கள் என கூறப்படுகிறது.

12 அணிகள் பங்கேற்கும் 10ஆவது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் ஜூன் 12ஆம் தேதி தொடங்கியது. இந்தியா உள்பட 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடர் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குருப் ஏவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் பி-வில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. 24 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 33 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

2026 womens t20 wc

2 நாட்களில் 4 ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான மோதல் எப்போதும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் நிலையில், இன்றைய போட்டிமீதும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Heat to Head..

பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடுகளத்தை பொறுத்தவரையில், நல்ல பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும் என்பதால், பெரிய ஷாட்களை அடிப்பது எளிதாக இருக்கும். அதேநேரத்தில் தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஸ்விங் கிடைக்கும் என்பதால் ஆரம்பத்தில் அவர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. ஸ்பின்னர்களுக்கு பெரிய நம்பிக்கை இல்லை என்றாலும், பந்து பழையதாகும் போது க்ரிப் கிடைக்க வாய்ப்புள்ளது. முதல் பேட்டிங்கின் போதான சராசரி ஸ்கோர் 145ஆக உள்ளது. இந்த ஆடுகளத்தில் சேஸிங் செய்த அணி அதிகமாக வெற்றிபெற்றுள்ளது.

இதுவரை, இரு அணிகளுக்கும் இடையே 16 டி20 சர்வதேசப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 13 போட்டிகளில் இந்தியாவும், 3 போட்டிகளில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 5 போட்டிகளில், இந்திய அணி 4 முறை வெற்றி பெற்றுள்ளது.