வெல்லிங்டனில் இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தில். 352 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா, 5 விக்கெட்டுகள் தேவை. சொந்த மண்ணில் நியூசிலாந்து போராடி சமநிலை தேடுகிறது.
நியூசிலாந்து மண்ணில் வெல்லிங்டனில் நடைபெற்றுவரும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
பரபரப்பான நடந்துவரும் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 368 ரன்கள் அடித்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியா கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் சதத்தின் உதவியால் 720/9 ரன்கள் குவித்து டிக்ளார் செய்தது.
இந்தியா 352 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிவரும் நியூசிலாந்து அணி 217 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
கடைசி செஷனுக்கு போட்டி நகர்ந்திருக்கும் நிலையில் இந்தியா வெற்றிபெற 5 விக்கெட்டுகள் தேவையாக உள்ளது. சொந்தமண்ணில் ஆட்டத்தை சமன்செய்ய நியூசிலாந்து போராடிவருகிறது.