ajit agarka PTI
கிரிக்கெட்

பும்ரா மீது வெறுப்பு; CSK வீரருக்கு ஆதரவு.. பிசிசிஐயிடம் மோதிய அகர்கர்.. வெளியான புதிய தகவல்!

உண்மையில், பிசிசிஐயுடனான அவரது கருத்து வேறுபாடு 2023-லேயே தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

Prakash J

அஜித் அகர்கரின் தற்போதைய ஒப்பந்தக் காலம் வரும் அக்டோபர் 4, 2026 உடன் முடிவடைய உள்ளது. இதற்கிடையே, பிசிசிஐ நிர்வாகத்திற்கும் தேர்வுக் குழுவிற்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவிய நிலையில், அவர் தனது பணியில் தொடரப்போவதில்லை என பிசிசிஐயிடம் உறுதிப்படத் தெரிவித்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன. இதன் பின்னணியில் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவராக, கடந்த 2023ஆம் ஆண்டு பதவியேற்றவர், முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அஜித் அகர்கர். அவரது பதவிக்காலத்தில், இந்திய அணி 2024 மற்றும் 2026 டி20 உலகக்கோப்பைகளையும், 2025 சாம்பியன்ஸ் டிராபியையும், ஆசியக் கோப்பையையும் வென்றது. இது தவிர வேறு சில தொடர்களையும் வென்றது. இருப்பினும், அவரது பதவிக்காலத்தில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா (டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து) மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் (அனைத்து வடிவங்களிலிருந்தும்) ஆகியோரும் ஓய்வு பெற்றது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

Bcci

இந்தச் சூழலில், அகர்கரின் தற்போதைய ஒப்பந்தக் காலம் வரும் அக்டோபர் 4, 2026 உடன் முடிவடைய உள்ளது. இதற்கிடையே, பிசிசிஐ நிர்வாகத்திற்கும் தேர்வுக் குழுவிற்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, அவர் தனது பணியில் தொடரப்போவதில்லை என பிசிசிஐயிடம் உறுதிப்படத் தெரிவித்ததாகவும் ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன. இதனால், அஜித் அகர்கரின் பதவிக்காலம் முடிவுக்கு வரவிருக்கிறது. அணித் தேர்வில் பல சமயங்களில் பிசிசிஐயின் 'தலையீட்டை' அவர் எதிர்த்தாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

உண்மையில், பிசிசிஐயுடனான அவரது கருத்து வேறுபாடு 2023-லேயே தொடங்கியதாகக் கூறப்படுகிறது.அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கான கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவை நியமிப்பதை அவர் எதிர்த்ததாகவும், அதே ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கேப்டனாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடை அகர்கர் விரும்பியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பும்ராவின் மீள் வருகையில் பிசிசிஐக்கு அவருக்கு ஆதரவளிக்க, அகர்கரின் கனவு நிறைவேறாமல் போனதாகக் கூறப்படுகிறது.

ajit agarkar

பின்னர், ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்த கேள்வியிலும் இந்த விவகாரம் முற்றியதைத் தொடர்ந்து, ரோகித்துக்கு ஆதரவாக பிசிசிஐ களத்தில் நின்றது. அடுத்து, விவிஎஸ் லட்சுமணனுக்கும் அவருக்கும் இடையே மோதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, மும்பையில் நடைபெற்ற பிசிசியின் ஆய்வுக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை எனச் செய்திகள் வெளியாகின. ஆனாலும், அடுத்த ஆண்டு உலகக்கோப்பை நடைபெற இருப்பதைக் காரணம் காட்டி அவர் பதவியை நீட்டிக்க பிசிசிஐ முன்வந்தது. ஆனால், அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.