இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் அணி web
கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறுமா? இந்த 4 வழிகள்தான் இருக்கு!

WTC புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்கா முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 2வது இடத்திலும் நீடிக்கும் நிலையில், 3வது இடத்தில் இருக்கும் இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்..

Rishan Vengai

2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எதிர்வரும் ஜுன் மாதம் புகழ்பெற்ற லண்டன் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில், பைனலுக்கு செல்ல இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை முதலிய 4 அணிகளுக்கு இடையே பலத்தபோட்டி நிலவுகிறது.

அனைத்து அணிகளுக்கும் கடைசியாக 3 முதல் 5 போட்டிகளே மீதமுள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியின் வெற்றி தோல்வியும் புள்ளிப்பட்டியலை தலைகீழாக மாற்றிவருகின்றன.

sa vs sl

அந்தவகையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றிருக்கும் தென்னாப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திகு முன்னேறியுள்ளது. அதேபோல இந்தியாவை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியிருக்கும் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.

ஒருபோட்டியின் தோல்விக்கு முன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருந்து இந்திய அணி தற்போது 3வது இடத்தில் நீடிக்கிறது. இன்னும் இந்தியாவிற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகளே மீதமுள்ள நிலையில், WTC இறுதிப்போட்டிக்கு இந்திய அணி செல்வதற்கான வழிகள் என்னென்ன இருக்கிறது, என்னவெல்லாம் நடந்தால் இந்தியா பைனலுக்கு செல்லும் என்ற விவரத்தை பார்க்கலாம்.

இந்தியாவிற்கு இருக்கும் 4 வழிகள் என்னென்ன?

2025-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியானது புகழ்பெற்ற லண்டன் மைதானத்தில் ஜுன் 11 முதல் ஜுன் 15 வரை நடக்கவிருக்கிறது. ரிசர்வ் டேவாக ஜுன்16ம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் WTC புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடத்தை சீல் செய்யக்கூடிய வாய்ப்புகள் 4 அணிகளுக்கு நீடிக்கின்றன.

அதனடிப்படையில் இந்தியாவிற்கு இன்னும் (vs AUS) 3 போட்டிகளும், ஆதிரேலியாவுக்கு (vs ind - 3, vs Sl -2) இன்னும் 5 போட்டிகளும், தென்னாப்பிரிக்காவுக்கு (vs PAK - 2) இன்னும் 2 போட்டிகளும், இலங்கைக்கு (vs AUS) இன்னும் 2 போட்டிகளும் மீதமுள்ளன. இதில் முதலிரண்டு இடத்தை பிடிக்கும் அதிக வாய்ப்பானது தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கே அதிகமாக உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி

இந்நிலையில் இந்தியாவிற்கு WTC இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான 4 வாய்ப்புகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்..

  • BGT 4-1 or 3-1: இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 அல்லது 3-1 என வென்றால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

  • BGT 3-2: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-2 என இந்தியா வென்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை ஒன்றிலாவது வெல்ல வேண்டும்.

  • BGT 2-2: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரானது 2-2 என சமனில் முடிந்தால், இலங்கை ஆஸ்திரேலியாவை 2-0 என வீழ்த்த வேண்டும்.

  • BGT 2-3: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-3 என இந்தியா தோற்றால், பாகிஸ்தான் தென்னாப்பிரிக்காவை 2-0 என தோற்கடித்து, ஆஸ்திரேலியா இலங்கையை ஒரு போட்டியிலாவது வெல்ல வேண்டும்.