இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது..
டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா மற்றும் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா அணிகள் மோதம் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது..
பரபரப்பாக தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் டாஸை இழந்தார். டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடிவருகிறது.
இந்திய அணியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு நம்பர் 3 பேட்டராக வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாஷிங்டன், ஜடேஜா, அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் என 4 ஸ்பின்னர்களுடன் களம்கண்டுள்ள இந்திய அணியில், வேகப்பந்துவீச்சாளர்களாக முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் இடம்பெற்றுள்ளனர். மேலும் காயத்தில் இருந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பியுள்ளார்..
தென்னாப்பிரிக்கா அணியில் ககிசோ ரபாடா முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை.. தென்னாப்பிரிக்கா அணி 8 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்களுடன் விளையாடிவருகிறது..
தொடர்ச்சியாக டாஸை இழந்தபிறகு பேசிய சுப்மன் கில், நான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தான் டாஸை வெல்லுவேன் என நினைக்கிறேன்.. அணியில் ரிஷப் பண்ட் கம்பே கொடுத்துள்ளார், அக்சர் பட்டேல் அணியில் நீடிக்கிறார் என்று பேசினார்..