Vaibhav Sooryavanshi x page
கிரிக்கெட்

துலீப் டிராபி| துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்ட 15 வயது சூர்யவன்ஷி.! கேப்டன் யார் தெரியுமா?

6 மண்டல அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கும் துலீப் டிராபியில் கிழக்கு மண்டல அணிக்கான துணைக் கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

Rishan Vengai

ஜிம்பாப்வே தொடருக்குப் பிறகு இஷான் கிஷன், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் துலீப் டிராபியில் கிழக்கு மண்டலத்துக்காக விளையாட உள்ளனர். ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 10 வரை நடைபெறும் இந்த தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள், லீக் சுற்றில் கிழக்கு, மேற்கு, வடக்கு, வடகிழக்கு அணிகள் மோதுகின்றன. 15 பேர் கொண்ட கிழக்கு அணிக்கு இஷான் கேப்டனாக, 15 வயது வைபவ் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டது பெரும் கவனத்தை ஈர்க்கிறது.

ஜிம்பாப்வே தொடர் முடிந்த கையோடு இஷான் கிஷன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இருவரும் துலீப் டிராபியில் கிழக்கு மண்டல அணிக்காக விளையாட உள்ளனர்.

வைபவ் சூர்யவன்ஷி

ஆகஸ்டு 23 முதல் செப்டம்பர் 10 வரையில் நடைபெறவிருக்கும் இத்தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. ஏற்கனவே அரையிறுதிக்கு மத்திய மற்றும் தெற்கு மண்டல அணிகள் தகுதிபெற்றுள்ள நிலையில், கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு மண்டல அணிகள் இரண்டு லீக் போட்டிகளில் மோதுகின்றன.

முதல் போட்டியில் கிழக்கு மற்றும் வடகிழக்கு மண்டல அணிகள் மோதவிருக்கும் நிலையில், 15 பேர் கொண்ட கிழக்கு மண்டல அணிக்கு இஷான் கிஷன் கேப்டனாகவும், அதே அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி துணைக்கேப்டனாகவும் செயல்பட உள்ளனர். 15 வயது சிறுவன் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது கவனத்தை பெற்றுள்ளது.