பிக் கிரிக்கெட் லீக் x
கிரிக்கெட்

மேல் எழும்பி மீண்டும் ஸ்டம்பிலேயே நின்ற பெய்ல்ஸ்.. 98 ரன்னில் தப்பித்த அதிர்ஷ்டசாலி வீரர்! #Viral

பிக் கிரிக்கெட் லீக் போட்டியில் பேட்ஸ்மேன் 98 ரன்னில் இருந்தபோது, பவுலர் போல்ட் எடுத்தபோதும் பெய்ல்ஸ் கீழே விழாமல் ஸ்டம்பிலேயே நின்றதால் பேட்ஸ்மேனுக்கு நாட் அவுட் வழங்கப்பட்டது.

Rishan Vengai

பிக் கிரிக்கெட் லீக் (BCL) டி20 தொடரின் முதல் பதிப்பானது குஜராத்தில் உள்ள சூரத் நகரில் நடைபெற்றுவருகிறது. டிசம்பர் 12 முதல் டிசம்பர் 22வரை வெறும் 10 நாட்களில் 18 போட்டிகள் கொண்டதாக நடக்கும் டி20 தொடரில், மத்திய பிரதேச டைகர்ஸ், மும்பை மெரைன்ஸ், நார்த்தென் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ரீகல்ஸ், சவுத்தெர்ன் ஸ்பார்ட்டன்ஸ், உத்திர பிரதேச பிரிஜ் ஸ்டார்ஸ் முதலிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த 6 அணிகளிலும் யூசுப் பதான், இர்ஃபான் பதான், ஷிகர் தவான், வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் சைமன்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் கிப்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.

பிக் கிரிக்கெட் லீக்

ஆறு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருபோட்டியில் மோதி முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிகளில் பங்கேற்கும்.

பெய்ல்ஸ் விழாமல் அதிர்ஷ்டவசமாக தப்பித்த வீரர்..

பிக் கிரிக்கெட் லீக்கில் நடைபெற்ற மத்திய பிரதேச டைகர்ஸ் மற்றும் உத்தர பிரதேச பிரிஜ் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த யூசுப் பதான் தலைமையிலான மத்திய பிரதேச டைகர்ஸ் அணி 20 ஓவரில் 239 ரன்கள் குவித்தது.

அதனைத்தொடர்ந்து விளையாடிய பிரிஜ் ஸ்டார்ஸ் அணியில் கேப்டன் சிராக் காந்தி 98 ரன்களில் இருந்தபோது, பவன் நெகி வீசிய பந்தில் போல்டானார். ஆனால் பந்து பட்டு ஸ்டம்ப் சாய்ந்தாலும் எகிறிய பெய்ல்ஸ் கீழேவிழாமல் ஸ்டம்பின் மீதே அப்படியே நின்றது. இதனை பார்த்த வீரர்கள், அம்பயர்கள், கமண்ட்டேட்டர்கள் என அனைவரும் ஆச்சரியமடைந்தனர். ஸ்டம்பிலிருந்து பெய்ல்ஸ் கீழே விழாததால் பேட்ஸ்மேன் நாட் அவுட் கொடுக்கப்பட்டார்.

உலகத்தின் அதிர்ஷ்டசாலி கிரிக்கெட் வீரராக மாறிய காந்தி சதமடித்து அசத்தினார். ஆனால், அவர்களுடைய ஸ்டார்ஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பெய்ல்ஸ் கீழே விழாத இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.