கனடாவை வீழ்த்தி யுஏஇ வெற்றி cricinfo
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை | கனடாவை வீழ்த்தி ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி!

2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் கனடா அணியை வீழ்த்தி ஐக்கிய அரபு அமீரகம் வெற்றிபெற்றது.

Rishan Vengai

டெல்லியில் நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில், கனடாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி யுஏஇ அணி வெற்றி பெற்றது. 151 ரன்கள் இலக்கை 19.4 ஓவரில் எட்டிய யுஏஇ அணியில் ஆர்யான்ஷ் சர்மா 74 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியை உறுதிசெய்தார். இது யுஏஇ அணியின் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டாவது வெற்றியாகும்.

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் 10ஆவது சீசன், கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வரும் நிலையில், இன்றைய போட்டியில் கனடா மற்றும் யுஏஇ அணிகள் மோதிக்கொண்டன.

கனடா அணி

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கனடா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது.

ஆர்யான்ஷ் சர்மா

151 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய யுஏஇ அணி, 19.4 ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடக்க வீரராக விளையாடிய ஆர்யான்ஷ் சர்மா 6 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் உட்பட 74 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியை உறுதிசெய்தார். இது டி20 உலகக்கோப்பை வரலாற்றில் யுஏஇ அணிக்கு இரண்டாவது வெற்றியாகும்.