2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை என இரண்டு ஐசிசி தொடர்களின் இறுதிப்போட்டியிலும் சதம் விளாசிய ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட், ஆஸ்திரேலியாவுக்கு இரண்டு உலக கோப்பைகளை வெல்ல காரணமாக இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டிலும் சிறந்த கிரிக்கெட்டை விளையாடிய டிராவிஸ் ஹெட், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் மதிப்புமிக்க விருதான ஆலன் பார்டர் பதக்கத்தை வென்றுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் 2024-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட்டராகவும் டிராவிஸ் ஹெட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் மதிப்புமிக்க தனிநபர் விருதாக பார்க்கப்படும் ஆலன் பார்டர் பதக்கம், முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் ஆலன் பார்டரின் பெயரில் வழங்கப்படுகிறது. இந்த பதக்கம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவால் மட்டும் இல்லாமல் சக வீரர்கள், மீடியா மற்றும் அம்பயர்களின் வாக்குகளின் எண்ணிக்கையின் மூலம் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மிட்செல் மார்ஸ்க்கு ஆலன் பார்டர் பதக்கம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பதக்கத்தை வெல்லும் முதல் தென் ஆஸ்திரேலியா வீரராக டிராவிஸ் ஹெட் முத்திரை பதித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையில் 208 வாக்குகளை பெற்ற டிராவிஸ் ஹெட், பாட் கம்மின்ஸை விட 61 வாக்குகள் மற்றும் ஹசல்வுட்டை விட 50 வாக்குகள் அதிகம் பெற்று விருதை வென்றுள்ளார். 3 வடிவ கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்கும் வீரர்களுக்காக கொடுப்படுகிறது ஆலன் பார்டர் பதக்கம்.
அதுமட்டுமில்லாமல் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் 2024-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட்டர் விருதையும் டிராவிஸ் ஹெட் வென்றுள்ளார்.
ஆலன் பார்டர் பதக்கம் - டிராவிஸ் ஹெட்
பெலிண்டா கிளார்க் விருது - அனாபெல் சதர்லேண்ட்
ஷேன் வார்ன் சிறந்த டெஸ்ட் வீரர் - ஜோஷ் ஹேசில்வுட்
ஆண்களுக்கான சிறந்த ODI வீரர் - டிராவிஸ் ஹெட்
சிறந்த மகளிர் ஒருநாள் வீராங்கனை - ஆஷ் கார்ட்னர்
ஆண்களுக்கான T20I சிறந்த வீரர் – ஆடம் ஷாம்பா
பெண்களுக்கான T20I சிறந்த வீராங்கனை – பெத் மூனி
பிராட்மேன் இளம் கிரிக்கெட் வீரர் - சாம் கான்ஸ்டாஸ்
பெட்டி வில்சன் இளம் கிரிக்கெட் வீரர் - சோலி ஐன்ஸ்வொர்த்
பெண்களுக்கான உள்நாட்டு வீராங்கனை – ஜார்ஜியா தொகுதி
ஆண்களுக்கான உள்நாட்டு வீரர் – பியூ வெப்ஸ்டர்
WBBL|10 போட்டியின் சிறந்த வீரர் - ஜெஸ் ஜோனாசென் & எலிஸ் பெர்ரி
BBL|14 போட்டியின் சிறந்த வீரர் - கூப்பர் கோனோலி & க்ளென் மேக்ஸ்வெல்