இங்கிலாந்து-இந்தியா முதல் ஒருநாள் போட்டியில், 61 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து 80 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் டசன்-ரூட் ஜோடி 121 ரன்கள் சேர்த்து அணியை மீட்டது. 40 ஓவர்களுக்கு பின் பந்துவீச வந்த அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி பிரத்யேக சாதனையை படைத்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 0-4 என படுதோல்வியை சந்தித்த பிறகு, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது இந்திய அணி.
முதல் ஒருநாள் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் மைதானத்தில் தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டக்கெட் மற்றும் பெத்தெல் இருவரும் நிதானமாக தொடங்கினாலும், ஒரே ஓவரில் 2 தொடக்க வீரர்களையும் வெளியேற்றிய குர்னூர் ப்ரார் அசத்தினார். 61 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து 80 ரன்களை எட்டுவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
இந்தசூழலில் 7வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த டசன் மற்றும் ரூட் இருவரும் 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட 47. 5 ஓவரில் ஆல் அவுட்டான இங்கிலாந்து 258 ரன்கள் சேர்த்தது. 40 ஓவர்களுக்கு மேல் பந்துவீச வந்த அக்சர் பட்டேல் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் ஜடேஜாவின் பிரத்யேக சாதனையை மீண்டும் உருவாக்கினார் அக்சர் பட்டேல். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 41-50 என்ற கடைசி 10 ஓவருக்குள் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே ஸ்பின்னராக ஜடேஜா நீடித்த நிலையில், மீண்டும் அச்சாதனையை நிகழ்த்தி அக்சர் பட்டேல் அசத்தியுள்ளார்.
259 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிவரும் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 43 ரன்களுடன் விளையாடிவருகிறது.