ind vs eng bcci
கிரிக்கெட்

முதல் ODI| 12 ஆண்டுகளாக தோற்காத இங்கிலாந்து.. சம்பவம் செய்யுமா இந்தியா? பேட்டிங் தேர்வு!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பர்மிங்காமில் நடைபெறுகிறது.

Rishan Vengai

இங்கிலாந்து மண்ணில் டி20 தொடரில் படுதோல்வி கண்ட ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி திரும்பிய நிலையில், இப்போது சுப்மன் கில் கேப்டனாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. பர்மிங்காம் மைதானத்தில் நடைபெறும் முதல் ODIயில், டாஸ் வென்ற ஹாரி ப்ரூக் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். ரோகித், கோலி, பும்ரா மீண்டும் களமிறங்கும் இந்தப் போட்டியில், 2014க்கு பிறகு அந்த மைதானத்தில் இந்தியா இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்துமா என்பது கவனத்தை ஈர்க்கிறது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடர்களில் விளையாடிவருகிறது.

5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் முதலில் நடைபெற்ற நிலையில், 4 போட்டிகளிலும் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி இந்தியாவை 0-4 என ஒயிட்வாஷ் செய்தது. ஒரு போட்டி மழையால் நடக்காமல் போனது. உலக சாம்பியனாக இங்கிலாந்துக்கு சென்ற ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி படுதோல்வியை சந்தித்து திரும்பியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து

இந்நிலையில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்துடன் மோதுகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக் பந்துவீச்சை தேர்வுசெய்தார். இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா என 3 நட்சத்திர வீரர்களும் திரும்பியுள்ளனர்.

போட்டி நடைபெறும் மைதானத்தில் இங்கிலாந்து கடைசி 7 ஒருநாள் போட்டிகளிலும் தோற்கவில்லை. கடைசியாக இந்தியாவிற்கு எதிராக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் தான் தோற்றிருந்தனர். இந்தசூழலில் இந்தியா டி20 தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய ஒருநாள் அணி

இந்திய அணி ஆடும் 11 பேர்:

ரோகித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்(கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, அக்சர் படேல், குர்னூர் பிரார், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா

இங்கிலாந்து அணி ஆடும் 11 பேர்:

ஜேக்கப் பெத்தல், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சாம் கரன், வில் ஜாக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் டாசன், ஜோஷ் டங், அடில் ரஷித்