\
இந்திய ஒருநாள் அணி
இந்திய ஒருநாள் அணிweb

2027 உலகக்கோப்பையில் கோலி இருப்பாரா..? “விவாதித்து வருகிறோம்” - அதிர்ச்சி கிளப்பிய கில்!

2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் எந்தெந்த வீரர்களை அணிக்குள் எடுக்கவேண்டும் என்பது குறித்து விவாதித்து வருவதாக சுப்மன் கில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
Published on
Summary

2027 உலகக்கோப்பை இலக்கை முன்னிட்டு ரோகித் சர்மா உடல் எடையை குறைத்து ஃபிட்டாக மாறியுள்ள நிலையில், விராட் கோலியும் ஃபிட்னஸை கடுமையாக பராமரித்து வருகிறார். இந்திய அணியில் தன்னைத் தேவை இல்லை என்றால் அதுவே கடைசி போட்டி என கோலி முன்பே கூறியிருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன் சுப்மன் கில், கோலியுடன் 2027 திட்டங்கள், அணி அமைப்பு, முக்கிய வீரர்கள் குறித்து தொடர்ந்து விவாதம் நடக்கிறது என விளக்கினார்.

2027ஆம் ஆண்டு நடைபெறவிருக்கு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று இந்திய அணிக்காக கோப்பை வெல்லவேண்டும் என்ற இலக்குடன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பயணித்து வருகின்றனர். ஒருபக்கம் இருவருக்கும் வயது 39, 37 இருப்பது அணிக்கு பிரச்னையாக அமையலாம் என்ற கேள்வி இருக்கும் சூழலில், ரோகித் சர்மா தன்னுடைய உடல் எடையை குறைத்து ஃபிட்டாக தன்னை நிரூபித்துள்ளார்.

ரோகித் - கோலி
ரோகித் - கோலிweb

அதேபோல விராட் கோலியும் தன்னுடைய ஃபிடன்ஸை பராமரித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இந்திய அணியில் தனக்காக தேவை இல்லை என்ற நிலை வந்தால், அதுதான் நான் விளையாடும் கடைசியாக இருக்கும் என்றும் கோலி தெரிவித்திருந்தார்.

இந்தசூழலில் தான் நாளை நடக்கவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் சுப்மன் கில், விராட் கோலி உடனான உரையாடல் குறித்தும், 2027 உலகக்கோப்பையில் அவருக்கான இடம்குறித்தும் பேசியுள்ளார்.

கோலி குறித்து பேசியிருக்கும் சுப்மன் கில், “உண்மையில், முன்தினம் கூட, 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான எங்கள் திட்டங்கள் குறித்து நான் அவருடன் விவாதித்தேன். அணி காம்பினேசன், எந்தெந்த வீரர்கள் அணியில் இடம்பெறலாம், தற்போது அணியில் இல்லாவிட்டாலும் எந்தெந்த வீரர்கள் எங்களுக்கு முக்கியமானவர்களாக இருக்க முடியும், மேலும் ஒவ்வொரு வீரரும் அணி அமைப்பில் எந்த இடத்தில் சிறப்பாகப் பொருந்துவார்கள் என்பது பற்றி நாங்கள் பேசினோம்” என்று கூறினார்.

கம்பீர் - சுப்மன் கில்
கம்பீர் - சுப்மன் கில்

கோலி, ரோகித் வயது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “கடந்த பத்தாண்டுகளாக ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இந்திய பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக இருந்து வருகின்றனர். மேலும் இருவரும் அணியின் தவிர்க்கமுடியாத பகுதியாகத் தொடர்கின்றனர். அவர்கள் அணிக்குக் கொண்டுவரும் அனுபவமும் திறமையும் வெளிப்படையாகவே மிகவும் மதிப்புமிக்கவை. கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு சூழ்நிலைகளில் அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம்” என பேசியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com