2026 ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டத்தில், பிளேஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்ற ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகளுக்குப் பிறகு, கடைசி இடத்திற்காக பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி அணிகள் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. லக்னோவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 197 ரன்கள் இலக்கை துரத்தும் பஞ்சாப், 2 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்த நிலையில், வெற்றி பெற்றாலே பிளேஆஃப் நம்பிக்கை நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
2026 ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் முதலிய 3 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், கடைசி 1 இடத்திற்கு பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவிவருகிறது.
இந்நிலையில் இன்று நடக்கும் லக்னோ அணிக்கு எதிரான கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே பஞ்சாப் அணிக்கு பிளேஆஃப் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். தோற்றால் தொடரிலிருந்து லக்னோ, சிஎஸ்கே, மும்பை முதலிய 3 அணிகளுக்கு பிறகு 4வது அணியாக வெளியேறும்.
இந்தசூழலில் இன்று நடைபெற்றுவரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 196 ரன்கள் குவித்துள்ளது. 197 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிவரும் பஞ்சாப் 2 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்களுடன் விளையாடிவருகிறது.