virat kohli
virat kohli X
கிரிக்கெட்

இங்கிலாந்திடம் “பாஸ்பால்” இருந்தால்.. இந்தியாவிடம் “விராட்பால்” இருக்கிறது! - சுனில் கவாஸ்கர்

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தொடர் என்பதால், அனைத்து தரப்பினரின் கவனத்தையும் இந்தத்தொடர் பெற்றுள்ளது. ஜனவரி 25ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 11-ம் தேதிவரை நடக்கவிருக்கும் போட்டிகளானது ஹைதராபாத், ராஜ்கோட், விசாகப்பட்டினம், ராஞ்சி மற்றும் தரம்சாலா மைதானங்களில் நடத்தப்படவிருக்கிறது.

முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் 4 குவாலிட்டி ஸ்பின்னர்களை இந்திய அணி அறிவித்துள்ளதால், ஸ்பின்னுக்கு சாதகமான ஆடுகளத்தில் இங்கிலாந்து வீரர்கள் என்ன செய்யப்போகிறார்கள், அந்த அணியின் பாஸ்பால் அணுகுமுறை எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Ben Stokes

இரண்டு சாம்பியன் அணிகளுக்கு இடையேயான போட்டி நெருங்க நெருங்க பல முன்னாள் வீரர்கள் வார்த்தைப் போரில் ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி இங்கிலாந்தின் நாசர் ஹுசைன் முதல் மைக்கேல் வாகன் வரை, இந்தியாவின் சுனில் கவாஸ்கர் முதல் ஹர்பஜன் சிங் வரை, பாஸ்பால் அட்டாக் இந்தியாவை வீழ்த்த போகிறது என்றும், பாஸ்பால் அட்டாக்கெல்லாம் இந்திய மண்ணில் எடுபடாது என்றும் மாறிமாறி கூறிவருகின்றனர்.

rohit

இந்நிலையில் தான் இங்கிலாந்திடம் “பாஸ்பால்” இருக்கிறது என்றால், அவர்களுக்கு கவுன்டர் அட்டாக் கொடுக்க எங்களிடம் “விராட்பால்” இருக்கிறது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பாஸ்பால் VS விராட்பால்! சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை!

முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னர் டெஸ்ட் தொடர் குறித்து பேசியிருக்கும் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், “டெஸ்ட் கிரிக்கெட்டில் கன்வெர்சன் ரேட் என்பது அதிக அரைசதங்களை சதங்களாக கன்வர்ட் செய்வது. அப்படி பார்த்தால் அதில் வல்லவர் விராட் கோலி. தற்போது விராட் கோலியிடம் இருக்கும் பேட்டிங் ஃபார்மும், கால்களின் மூவ்மென்டும் சிறப்பானதாக இருக்கிறது. அவரிடம் இருக்கும் அந்த அற்புதமான ஃபார்ம் தான் இங்கிலாந்தின் பாஸ்பால் அட்டாக்கிற்கு இந்தியா வைத்திருக்கும் கவுன்டர் அட்டாக். இங்கிலாந்திடம் பாஸ்பால் இருக்கிறது என்றால், எங்களிடம் விராட்பால் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

virat kohli

மேலும் இங்கிலாந்தின் பாஸ்பால் அட்டாக்கை பாராட்டியிருக்கும் அவர், “இங்கிலாந்து அணி கடந்த 2 வருடங்களாக பாஸ்பால் கிரிக்கெட்டை ஆடிவருகிறது. போட்டி எந்த இடத்திலிருந்தாலும் அதிரடியாக ஆடும் அணுகுமுறையானது, அவர்களுக்கு வெற்றியை கொடுத்துள்ளது. இந்தியாவின் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர்களின் “பாஸ்பால் அட்டாக்” எப்படி இருக்கப்போகிறது என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கப்போகிறது” என்று கூறியுள்ளார்.