“கோலி ஒரு புலியை போல கர்ஜித்தார்; அவரிடம் வச்சிக்காதிங்க!” - எச்சரிக்கும் முன்னாள் இங்கி. வீரர்!

ஒரு முறை விராட் கோலியிடம் ஸ்லெட்ஜிங் செய்த போது, கோலி ஒரு புலியை போல கர்ஜித்ததாகவும், அவரிடம் யாரும் வார்த்தை போரில் ஈடுபட வேண்டாம் எனவும் முன்னாள் இங்கிலாந்து வீரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
virat kohli
virat kohliX

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஜனவரி 25ம் தேதி தொடங்கும் தொடரானது, மார்ச் 11ம் தேதிவரை நடக்கவிருக்கிறது. இரண்டு மிகப்பெரிய அணிகளுக்கு இடையேயான தொடர் என்பதை தாண்டி, இந்திய ஸ்பின்னர்களுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் “பாஸ்பால்” அணுகுமுறை என்னவாகப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இங்கிலாந்து இந்தியாவில் வைத்து டெஸ்ட் தொடரை வெல்லும் என்று அவ்வணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியிருந்ததை அடுத்து பெரிய மோதலில் இவ்விரு அணிகளும் களம் காண்கின்றன.

virat kohli
virat kohli

இந்நிலையில் தான் கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த போது நடந்த சம்பவத்தை முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் கிரேம் ஸ்வான் பகிர்ந்துள்ளார். 2012ம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது. அப்போது 4வது போட்டியின் போது கோலியுடன் நடந்த சம்பவத்தை தான் தற்போது ஸ்வான் பகிர்ந்துள்ளார்.

ஓர் புலியை போல கோலி கர்ஜித்தார்! நாலாபுறமும் பவுண்டரி பறந்தது!

நான்காவது டெஸ்ட் போட்டியின் போது, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியுடன் இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் ஃபின் வார்த்தை போரில் ஈடுபட்டார். அப்போது கேப்டன் எம்எஸ் தோனியுடன் இணைந்து கோலி களத்தில் இருந்தார். இந்திய அணி 71க்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த சூழலில் ஃபின் கோலியுடன் வார்த்தை போரில் ஈடுபட, கோலி சதமடித்து ருத்ரதாண்டவம் ஆட 317 ரன்கள் சேர்த்த இந்தியா டிக்ளார் செய்தது. வெற்றிபெற வேண்டிய அந்த போட்டி சமனில் முடிந்தது.

Graeme Swann - virat kohli
Graeme Swann - virat kohli

கோலியுடனான மோதல் குறித்து பேசியிருக்கும் ஸ்வான், “கோலியிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று எங்களுக்கு முன்பே அறிவுரை கூறப்பட்டிருந்தது. இருப்பினும், ஸ்டீவன் ஃபின் இரண்டு அபாரமான பவுண்டரிகளுக்கு பிறகு உணர்ச்சிவசப்பட்டு கோலியிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஃபின் பேசுவதை பார்த்த கோலி உடனே அவருடைய தவறை உணர்ந்து கொள்வதற்காக “ஒரு புலியைப் போல கர்ஜித்தார்”. அதற்கு பிறகு களத்தில் நடந்ததெல்லாம் வேறு, ஃபின் போட்ட பந்தையெல்லாம் கோலி அடித்து நாலாபுறமும் நொறுக்கினார்” என்று ஸ்வான் ஸ்கை ஃபோர்ட்ஸ் உரையாடலின் போது விவரித்தார்.

மேலும் இங்கிலாந்து வீரர்கள் யாரும் கோலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com