கோலி - ரோகித்
கோலி - ரோகித் web
கிரிக்கெட்

சச்சின் தோனிக்கு மட்டுமே கிடைத்த கௌரவம்! விரைவில் ரோகித், கோலிக்கும் கிடைக்கும்!- கவாஸ்கர் நம்பிக்கை

Rishan Vengai

100 சர்வதேச சதங்கள், அதிகப்படியான சர்வதேச ரன்கள், அதிகப்படியான சர்வதேச அரைசதங்கள் என பல்வேறு உலக சாதனைகளை கைவசம் வைத்திருக்கும் சச்சின் டெண்டுல்கருக்கும், உலக கிரிக்கெட்டில் மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கும் பிசிசிஐ சிறப்பான கௌரவத்தை வழங்கியுள்ளது.

இந்திய அணிக்கு சச்சின் மற்றும் தோனி செய்திருக்கும் செயல்பாடுகளை கௌரவிக்கும் விதமாக, அவர்கள் அணிந்திருந்த நம்பர்.10 மற்றும் நம்பர்.7 இரண்டு ஜெர்சிகளுக்கும் ஒய்வளித்து சிறப்பான கவுரத்தை பிசிசிஐ வழங்கியுள்ளது. இந்த இரண்டு வீரர்களை தவிர வேறு எந்த இந்திய வீரர்களுக்கும் இந்த கௌரவம் வழங்கப்படவில்லை. சச்சின் டெண்டுல்கரின் நம்பர் 10 ஜெர்சிக்கு 2017ஆம் ஆண்டு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், தோனியின் நம்பர் 7 ஜெர்சிக்கு தற்போது ஓய்வளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Rohit Sharma

இந்நிலையில் தான் சச்சின் மற்றும் தோனி இரண்டு வீரர்களை தொடர்ந்து கோலி மற்றும் ரோகித்திற்கும் பிசிசிஐ அத்தகைய கௌரவத்தை வழங்கும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நம்பர் 18 மற்றும் நம்பர் 45 ஜெர்சிகளும் கௌரவிக்கப்படும்!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது போட்டியின் போது கோலி மற்றும் ரோகித் இருவரை பற்றி பேசியிருக்கும் சுனில் கவாஸ்கர், புகழ்பெற்ற வீரர்களான கோலி மற்றும் ரோகித் இருவரையும் வெகுவாக பாராட்டினார். அவர்கள் இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு பெரும் பங்களிப்பை செய்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அவர்களது ஜெர்சி எண்களும் ஓய்வு பெறுவதைக் கண்டு ஆச்சரியப்படப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

virat kohli

இதுகுறித்து அவர் பேசுகையில், “இந்திய கிரிக்கெட்டில் நம்பர் 7 மற்றும் நம்பர் 10 ஜெர்சி எண்களை போல், நம்பர் 45 மற்றும் நம்பர் 18 ஜெர்சிக்களும் எதிர்காலத்தில் ஓய்வு பெறப்போவதை என்னால் பார்க்க முடிகிறது” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் பேசியுள்ளார்.