ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் pt web
கிரிக்கெட்

’ரோகித்தை மட்டும் ஏன் டார்கெட் பண்றீங்க.. மற்ற வீரர்கள் என்ன பண்ணிட்டாங்க?’ - முன்னாள் வீரர் கேள்வி

மற்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும், நன்றாக விளையாடிவரும் ரோகித் சர்மாவை மட்டுமே ஏன் டார்கெட் பண்றீங்க என முன்னாள் வீரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Rishan Vengai

இந்திய கிரிக்கெட்டின் ‘ஹிட் மேன்’ என அழைக்கப்படும் ரோஹித் சர்மா எண்ணற்ற சாதனைகளுக்குச் சொந்தக்காரராக விளங்குகிறார். தவிர, உலகக்கோப்பையை வென்று தந்த கேப்டன்கள் வரிசையிலும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார். உலகக்கோப்பை வென்று தந்ததற்குப் பிறகு, அவர் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதேநேரத்தில், அடுத்த 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்குக் கவனம் செலுத்தும் நோக்கில், ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்திவருகிறார்.

ரோகித் சர்மா

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் பெரிய ரன்கள் அடிக்காத ரோகித் சர்மா மீது டார்கெட் செய்யப்பட்டது. அடுத்த போட்டி தான் ரோகித்திற்கு 3வது போட்டி என்றும், உலகக்கோப்பைக்கு அவர் செல்ல மாட்டார் என்றும் தகவல் வெளியானது. ஆனால் 3வது போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா 138 ரன்கள் குவித்து தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

இந்தசூழலில் தான் ஒவ்வொரு ஒருநாள் தொடரின்போதும் ஏன் ரோகித் சர்மா மீது மட்டும் டார்கெட் செட் செய்யப்படுகிறது, மற்ற வீரர்கள் என்ன பர்ஃபாமன்ஸ் செய்துவிட்டார்கள் என முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அவர், “ரோகித் சர்மா 2023 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக முதலிடத்தில் நீடிக்கிறார். அவருடைய சராசரி 50-க்கு மேல் இருக்கிறது. அதேபோல விராட் கோலியின் சராசரி 70-க்கு மேல் இருக்கிறது. ஆனால் இவர்களுக்கான இடங்களில் மீது மட்டும் ஏன் டார்கெட் செய்யப்படுகிறது. இவர்களை தவிர்த்து கில் மட்டுமே சிறப்பாக விளையாடியுள்ளார், மற்ற வீரர்களான கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்றவர்கள் பெரிய ஸ்கோரை அடிக்கவில்லை. ரோகித், கோலியை விட்டுவிட்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் உலகக்கோப்பைக்கு சென்று என்ன செய்வீர்கள்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல “பும்ராவிற்கு பிறகு இந்தியாவின் எக்ஸ் ஃபேக்டர் பவுலர் என்றால் அது குல்தீப் யாதவ் தான், ஒருநாள் வடிவத்தில் அவர் தான் உங்களுக்கு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்துள்ளார். அவருக்கு அணியில் வாய்ப்பு கொடுக்காமல் பெஞ்சில் அமரவைக்கிறீர்கள். பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்றவர்கள் இல்லை என்றால் இந்தியாவின் பந்துவீச்சு மோசமானதாக இருக்கிறது’ என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.