2025 champions trophy web
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி | என்ன பலத்துடன் இந்திய அணி இருக்கிறது..? ரோகித் & கோ குறித்து ஒரு பார்வை!

சாம்பியன்ஸ் டிராபி 2025-ல் இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து ஒரு பார்வை..

PT WEB

இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய தெம்புடன் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் களத்திற்குச் செல்கிறது இந்திய அணி. 

இந்திய கிரிக்கெட் அணி

இந்நிலையில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியின் பலம் பலவீனம் குறித்து சிறிது அலசலாம்...

அசுர பலத்துடன் இருந்தாலும்.. சில பிரச்னை உள்ளது!

மினி உலகக்கோப்பை தொடராக கருதப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் மற்றும் துபயில் களைகட்டப் போகிறது. சர்வதேச தரநிலையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் இந்தத்தொடரில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இதில் பங்களாதேஷ், நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அடங்கிய ஏ பிரிவில் இந்திய அணி உள்ளது.

ரோகித், விராட் ஜெர்சி

இந்திய அணியை பொறுத்தவரை ரோகித் ஷர்மாவின் தலைமை பெரும் பலன். அதேவேளையில் 35 வயதை தாண்டி ரோகித் ஷர்மா, விராட் கோலியின் ஆட்டம் நிலையற்று இருப்பது அவர்கள் மீது பலத்த நம்பிக்கையை பதிக்க முடியாமல் இருக்கிறது.

கில், ஷ்ரேயாஸ் ஐயர்

தொடக்க வீரர் சுப்மன் கில்லின் ஆட்டம் இந்திய அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. மத்திய வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் எப்படி தங்களை வலுப்படுத்திக் கொள்ள போகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

பந்துவீச்சை பொறுத்தவரை பும்ரா இல்லாதது பெரும் பின்னடைவாக உள்ளது. முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா ஆகிய வீரர்கள் வேகப்பந்துவீச்சில் கூடுதல் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

2013 சாம்பியன்ஸ் டிராபி

சாம்பியன்ஸ் கோப்பையில் இருமுறை சாம்பியன் என்ற பெருமைக்குரிய இந்திய அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் இருக்கிறது.