வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருக்கும் இலங்கை அணி, முதல் டெஸ்டில் 217 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பின்னர், 2வது டெஸ்டில் அதிரடி பதிலடி கொடுத்துள்ளது. லஹிரு உதர 188, கமிந்து மெண்டீஸ் 84, குசால் மெண்டீஸ் 69, தினுசா 92 ரன்கள் சேர்த்ததால் இலங்கை 9 விக்கெட்டுக்கு 549 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. பதிலுக்கு வெஸ்ட் இண்டீஸ் 1 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. நடந்துமுடிந்த தொடர்களில் ஒருநாள் தொடரை இலங்கை 1-0 என வென்ற நிலையில், டி20 தொடரை 2-1 என கைப்பற்றி பதிலடி கொடுத்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.
இந்நிலையில் 2 அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியை 217 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வென்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் மோதிவருகின்றன.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் தொடக்க வீரர் லஹிரு உதர அற்புதமான பேட்டிங் செய்து 188 ரன்கள் குவித்து அசத்தினார். தொடர்ந்து கமிந்து மெண்டீஸ் 84, குசால் மெண்டீஸ் 69 மற்றும் தினுசா 92 ரன்கள் என அசத்த 9 விக்கெட் இழப்புக்கு 549 ரன்கள் குவித்த இலங்கை அணி டிக்ளர் செய்தது.
தொடர்ந்து விளையாடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் சேர்த்துள்ளது.