தென்னாப்பிரிக்கா cricinfo
கிரிக்கெட்

PAK v SA | செம்ம மேட்ச்! ரபடா, ஜேசன் அபாரம்.. SA த்ரில் வெற்றி.. முதல் அணியாக WTC பைனலுக்கு தகுதி!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டில் த்ரில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெற்றுள்ளது.

Rishan Vengai

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 2-0 என தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என வென்ற பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை அவர்களின் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்த முதல் அணியாக வரலாறு படைத்தது.

pakistan

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியானது செஞ்சுரியன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது.

தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

பரபரப்பாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, இரண்டு இன்னிங்ஸ்களிலும் 211 மற்றும் 237 ரன்கள் சேர்த்தது. முதல் இன்னிங்ஸில் 301 ரன்கள் அடித்த தென்னாப்பிரிக்கா, இரண்டாவது இன்னிங்ஸில் 148 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது.

எளிதான இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அப்பாஸ் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்த, தொடக்க வீரர் டோனி 2 ரன்னிலும், ரிக்கெல்டன் 0 ரன்னிலும், ஸ்டப்ஸ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

19 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து மோசமான தொடக்கத்தை பெற்ற தென்னாப்பிரிக்காவை மார்க்ரம் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா இருவரும் மீட்டுஎடுத்துவர போராடினர். ஆனால் முக்கியமான நேரத்தில் 37 ரன்னில் வெளியேறினார்.

இந்தாண்டு 60-க்கு மேல் டெஸ்ட் சராசரி வைத்திருக்கும் டெம்பா பவுமா எப்படியும் எளிதில் விக்கெட்டை எடுத்துவருவார் என நினைத்தபோது, எட்ஜ் ஆகாத ஒரு பந்துக்கு அம்பயர் அவுட் கொடுக்க அதை ரிவ்யூகூட செய்யாமல் பவுமா வெளியேறியது போட்டியை தலைகீழாக திருப்பியது.

பவுமா வெளியேறியதும் அடுத்த 5 பந்துகளில் 3 விக்கெட்டை பறிகொடுத்த தென்னாப்பிரிக்கா 99 ரன்னுக்கு 8 விக்கெட்டை இழந்தது. எப்படியும் தோல்வியடையபோகிறது பாகிஸ்தானுக்கு எளிதான வெற்றி என நினைத்த தருணத்தில், அடுத்த 2 விக்கெட்டையும் விட்டுக்கொடுக்காமல் எஞ்சியிருந்த 49 ரன்களையும் அடித்த ரபாடா மற்றும் யான்சன் ஜோடி 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.

அபாரமாக பந்துவீசிய அப்பாஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனாலும் அவரால் வெற்றியை தேடித்தர முடியவில்லை.

WTC பைனலுக்கு தகுதிபெற்ற SA..

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென்னாப்பிரிக்கா தகுதிபெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா ஒரு அணியாக சீல்செய்துவிட்ட நிலையில், இந்தியா முன்னேற வேண்டுமானால் நாளைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து, 5வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டும். ஆஸ்திரேலியா இந்தியாவுடன் ஒரு வெற்றியும், இலங்கையை 2 போட்டியிலும் வீழ்த்தினால் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். ஆனால் இலங்கையை அவர்களின் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா எதிர்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.