கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா 93 ரன்னில் சுருண்டு சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. சைமன் ஹார்மர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றியை உறுதி செய்தார். 15 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா இந்திய மண்ணில் டெஸ்ட் வெற்றி பெற்றது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 உள்ளிட்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது. அந்த வகையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது..
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 159 மற்றும் 153 ரன்கள் அடித்தது.. முதல் இன்னிங்ஸில் 189 ரன்னுக்கு ஆட்டமிழந்த இந்தியா 124 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிவருகிறது..
124 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 93 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது..
அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுழற்பந்துவீச்சாளர் சைமன் ஹார்மர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது..
இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் அடித்த தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்..