லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒரே டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 108 பந்தில் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் 83 ரன்கள் குவித்து சதத்துக்கு 17 ரன் குறைவில் அவுட் ஆனார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 21/1 என அடித்துள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய மகளிர் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 1 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றது.
டி20 தொடர் முதலில் நடைபெற்ற நிலையில், முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றாலும் அடுத்த 2 போட்டிகளில் கம்பேக் கொடுத்த இங்கிலாந்து அணி 2-1 என தொடரை வென்று அசத்தியது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான ஒரே டெஸ்ட் போட்டி டி20 உலகக்கோப்பை முடிந்த கையோடு நேற்று தொடங்கப்பட்டது. லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தது.
தொடக்க வீரராக களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 108 பந்தில் 11 பவுண்டரிகள் 1 சிக்சர்களுடன் 83 ரன்கள் குவித்தார். சதமடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இஸ்ஸி வாங் மந்தனாவை வெளியேற்றினார். இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 21 ரன்னுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.