சுப்மன் கில் web
கிரிக்கெட்

சுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம்.. மருத்துவமனையில் சிகிச்சை! போட்டியிலிருந்து விலகல்!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளில் பேட்டிங் செய்த சுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது..

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 உள்ளிட்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது. அந்த வகையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது..

இந்தியா - தென்னாப்பிரிக்கா

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 159 மற்றும் 153 ரன்கள் அடித்தது.. முதல் இன்னிங்ஸில் 189 ரன்னுக்கு ஆட்டமிழந்த இந்தியா 124 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிவருகிறது..

சுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம்..

இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது 3வது வீரராக களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில், தென்னாப்பிரிக்கா ஸ்பின்னர் ஹார்மருக்கு எதிராக 34.5 ஒவரில் பவுண்டரி விரட்டினார். அப்போது இந்திய கேப்டன் சுப்மன் கில்லுக்கு கழுத்தில் பிடிப்பு ஏற்பட்டது.. அதிக வலி காரணமாக அவர் ரிட்டயர்டு அவுட் மூலம் வெளியேறினார்.. நடந்து சென்றபோது அவரால் கழுத்தை அசைக்க கூட முடியாத காட்சியை பார்க்க முடிந்தது..

இந்தசூழலில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், அவரால் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது..

பிசிசிஐ வெளியிட்டிருக்கும் அப்டேட்டின் படி, “கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், கேப்டன் சுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு அவர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் தற்போது மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளார். இந்த டெஸ்ட் போட்டியில் அவர் மேலும் பங்கேற்க மாட்டார். பிசிசிஐ மருத்துவக் குழுவால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்” என கூறப்பட்டுள்ளது..