இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வென்று அசத்தியுள்ளது ஆஸ்திரேலியா அணி.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடியது..
பெர்த் மைதானத்தில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் 3 முறை மழை குறுக்கிட்டதால் நேரக்குறைப்பு காரணமாக 26 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் 136/9 ரன்கள் சேர்த்தது. DLS முறைப்படி ஆஸ்திரேலியா அணிக்கு 26 ஓவரில் 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளத்ஹு.
அதனைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 21.1 ஓவரில் 131/3 ரன்களை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.
இந்த தோல்வியின் மூலம் இந்திய கேப்டனாக டெஸ்ட், ODI, டி20 3 வடிவத்திலும் முதல் போட்டியில் தோல்வியை பதிவுசெய்து கேப்டனாக மோசமான சாதனை படைத்தார் சுப்மன் கில். இந்தப்பட்டியலில் விராட் கோலிக்கு பிறகு 2வது இந்திய கேப்டனாக இணைந்தார்.