shreyas iyer bcci
கிரிக்கெட்

முதல் சர்வதேச டி20 சதம் அடித்தார் ஸ்ரேயாஸ்.. 43 பந்தில் 102 ரன்கள்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தன்னுடைய முதல் டி20 சதத்தை பதிவுசெய்தார் இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்.

Rishan Vengai

43 பந்தில் 102 ரன்கள் அடித்து தனது முதல் சர்வதேச டி20 சதத்தை பதிவு செய்த ஸ்ரேயாஸ் ஐயர், இந்திய அணிக்கு 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா வென்ற நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது.

டி20 அறிமுகம் பெற்ற நமன் திர்

பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் அடித்தது. அறிமுக போட்டியில் விளையாடிய நமன் திர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷாய் ஹோப் 52 ரன்களும், ஷெர்ஃபேன் ரூதர்போர்டு 56 ரன்களும் அடித்தனர்.

இந்திய டி20 அணி

172 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணியில், சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சஞ்சு சாம்சன் 9 பந்தில் 11 ரன்னும், அபிஷேக் சர்மா 10 பந்தில் 21 ரன்னும் அடித்து அவுட்டாகினர். 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் மற்றும் இஷான் கிஷன் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

Shreyas Iyer

43 பந்தில் 10 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என சிதறடித்த ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய முதல் சர்வதேச டி20 சதத்தை பதிவுசெய்து அசத்தினார். 5 பவுண்டரிகளை விரட்டிய இஷான் கிஷன் 37 ரன்கள் அடித்தார். ஸ்ரேயாஸின் அதிரடியால் 14.4 ஓவரில் இலக்கை எட்டிய இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.