virat kohli - Shasi Tharoor web
கிரிக்கெட்

’அவரை மீண்டும் ஓய்விலிருந்து கூப்பிட முடியாதா..?’ - களத்தில் கோலியை மிஸ் செய்யும் சசி தரூர்!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறும் இடத்திலிருந்த போதும் இந்திய அணி தற்போது தோல்வியின் அருகாமையில் இருக்கிறது. இது மூத்த காங்கிரஸ் தலைவரான சசி தரூரை விராட் கோலியை மிஸ்செய்ய வைத்துள்ளது.

Rishan Vengai

மூத்த வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லாமல் இங்கிலாந்திற்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என பின்தங்கியுள்ளது.

நல்ல பேட்டிங் மற்றும் பவுலிங் திறமைகளை இந்திய வீரர்கள் வெளிப்படுத்திய போதிலும், அவர்களால் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. 2 போட்டிகளில் வீரர்களின் அனுபவமின்மை மற்றும் கேப்டன்சியில் முதிர்ச்சி இல்லாததால் மட்டுமே தோல்வியை சந்தித்தது இந்தியா.

இந்தியா - இங்கிலாந்து

இந்நிலையில் 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக 374 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த போதிலும், இந்திய அணி தோல்வியின் விளிப்பில் உள்ளது.

கோலியை மீண்டும் அழைக்க தாமதமாகிவிட்டதா?

5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெல்ல 35 ரன்களும், இந்தியா வெல்ல 4 விக்கெட்டுகளும் மட்டுமே தேவை. இந்த சூழலில் இரண்டு அணிக்கும் வெற்றியைபெற வாய்ப்பு உள்ளது. ஆனால் நல்ல ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த போதிலும் இங்கிலாந்தை இந்த நிலைமைக்கு வர இந்தியா அனுமதித்திருக்க கூடாது.

விராட் கோலி

இதை மூத்த காங்கிரஸ் தலைவரான சசி தரூரும் வெளிப்படுத்தியுள்ளார். 5வது டெஸ்ட்டில் விராட் கோலி இருந்திருந்தால் இந்நேரம் முடிவு இந்தியாவிற்கு சாதகமாக இருந்திருக்கும் என தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து எக்ஸ்தளத்தில் பதிவிட்டிருக்கும் சசி தரூர், “இந்தத் தொடரின் போது நான் சில முறை விராட் கோலியை மிஸ் செய்தேன். ஆனால் இந்த 5வது டெஸ்ட் போட்டியைப் போல ஒருபோதும் அதிகமாக மிஸ் பண்ணவில்லை. அவரது மன உறுதியும், களத்தில் அவருடைய உத்வேகமான இருப்பும், அவரது அபரிமிதமான பேட்டிங் திறமையும், இப்போட்டியை வேறு ஒரு முடிவுக்கு வழிவகுத்திருக்கும். அவரை ஓய்வில் இருந்து நீக்குவதற்கு இப்போது தாமதமாகிவிட்டதா? விராட், நீங்கள் நாட்டுக்கு தேவை!” என பதிவிட்டுள்ளார். இப்பதிவிற்கு விராட் கோலி ரசிகர்கள் தாங்களும் மிஸ்செய்வதாக ரியாக்ட் செய்துவருகின்றனர்.