shami web
கிரிக்கெட்

3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள்.. ஷமியின் கடைசிநேர அதிரடியால் காலிறுதிக்கு சென்ற பெங்கால்! #Viral

சையத் முஷ்டாக் அலி தொடரின் காலிறுதிக்கு முந்தைய நாக் அவுட் போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாடிய முகமது ஷமி 17 பந்தில் 32 ரன்கள் அடித்து அணியை இக்கட்டான நிலையில் வெற்றிபெற செய்தார்.

Rishan Vengai

2024 சையத் முஷ்டாக் அலி டிரோபியானது நவம்பர் 23 முதல் தொடங்கி டிசம்பர் 15 வரை நடைபெறுகிறது. பரபரப்பாக நடந்துவரும் தொடரில் 38 அணிகள் கோப்பைக்காக போட்டிப்போட்ட நிலையில், தொடரானது காலிறுதிப்போட்டிகளை எட்டியுள்ளது.

இதுவரை 38 அணிகளிலிருந்து “மத்திய பிரதேசம், சௌராஷ்டிரா, பெங்கால், பரோடா, மும்பை, விதர்பா, டெல்லி” முதலிய 7 அணிகள் காலிறுதிக்கு தகுதிபெற்ற நிலையில், 8வது அணியாக எந்த அணி காலிறுதிக்கு முன்னேறும் என்ற போட்டியானது ஆந்திரா மற்றும் உத்தர பிரதேச அணிகளுக்கு இடையே தற்போது நடந்துவருகிறது.

syed mushtaq ali

இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய போட்டியில் பெங்கால் மற்றும் சண்டிகர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஷமி பங்காற்றிய 17 பந்தில் 32 ரன்கள் ஆட்டமானது அவருடைய பெங்கால் அணியை 3 ரன்னில் வெற்றிபெற உதவியது.

ஷமியின் உதவியால் காலிறுதிக்கு தகுதிபெற்ற பெங்கால்..

இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய நாக் அவுட் போட்டியில் பெங்கால் மற்றும் சண்டிகர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி 114 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்நிலையில் 10வது வீரராக பேட்டிங் செய்ய வந்த முகமது ஷமி 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி 17 பந்தில் 32 ரன்கள் அடித்து அசத்த 20 ஓவர் முடிவில் 159 ரன்களை எட்டியது பெங்கால் அணி.

160 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய சண்டிகர் அணியும் வெற்றிக்காக போராட கடைசி 6 பந்துக்கு 11 ரன்கள் தேவையென்ற நிலைக்கு போட்டி சென்றது. முடிவில் கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்த சண்டிகர் அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஷமியின் கடைசி நேர அதிரடி பேட்டிங்கால் காலிறுதிக்கு பெங்கால் அணி தகுதிபெற்றுள்ளது. ஷமியின் பேட்டிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சையத் முஷ்டாக் அலி தொடரின் காலிறுதி போட்டிகள் டிசம்பர் 11ம் தேதி நடைபெறவிருக்கின்றன.