ஷாய் ஹோப் reuters
கிரிக்கெட்

21வது ODI சதம் விளாசிய ஷாய் ஹோப்.. இந்தியாவை தோற்கடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?

இந்தியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் சதமடித்து அசத்தினார்.

Rishan Vengai

21வது ஒருநாள் சதத்தை விளாசிய ஷாய் ஹோப், வெஸ்ட் இண்டீஸை வெற்றியின் பாதையில் முன்னேற்றியுள்ளார். 110 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடி இந்திய அணியை சவாலுக்கு உள்ளாக்கியுள்ளார். 352 ரன்கள் இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணியின் போராட்டம் தொடர்கிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்திய அணி 2-0 என ஏற்கனவே தொடரை வென்றுள்ளது.

இந்தசூழலில் இரண்டு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நியூ சண்டிகரில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேஎல் ராகுல் 129 ரன்களும், ரோகித் சர்மா 92 ரன்களும் விளாச 50 ஓவரில் 351 ரன்களை குவித்தது இந்தியா.

352 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியில், அவ்வணியின் கேப்டன் ஷாய் ஹோப் 21வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்து வெற்றியின் பாதையில் வெஸ்ட் இண்டீஸை கொண்டுசென்றுள்ளார். 110 ரன்களும் ஆட்டமிழக்காமல் விளையாடிவரும் நிலையில், இந்திய அணி அவருடைய விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தடுமாறி வருகிறது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50க்கும் மேற்பட்ட சராசரியுடன் தொடர்ந்து அபாரமாக விளையாடிவருகிறார் ஷாய் ஹோப். சுப்மன் கில், ஹாரி ப்ரூக்கிற்கு பிறகு அதிக ரன்கள் அடித்த வீரராகவும் நடப்பாண்டில் நீடிக்கிறார்.