rajini - sai sudharsan web
கிரிக்கெட்

’உலகம் ஒருவனுக்கா..’ இந்த ரஜினி பாட்டு தான் அதிகம் கேட்பன்! - சாய் சுதர்சன்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கபாலி படத்தில் இடம்பெற்றிருக்கும் உலகம் ஒருவனுக்கா என்ற பாடலை தான் அதிகம் கேட்பேன் என்று கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் கூறியுள்ளார்.

Rishan Vengai

இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கையாக விளங்கும் தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன், கவுதம் கம்பீர் தன்னிடம் காட்டும் நம்பிக்கை தான் திறமையை வெளிப்படுத்த உதவுகிறது என்கிறார். தினமும் செய்யவேண்டியவற்றை எழுதிக் கொண்டு, நாள் முடிவில் முடிந்ததையும் ரிசல்டையும் பதிவு செய்வது வழக்கம். இதற்கிடையில் மெல்லிய இசையில் பழைய பாடல்களை கேட்பார்; தற்போது கோடைக்கால காற்றே பாடலை அதிகம் ரசிக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால வீரர்கள் வரிசையில் நம்பிக்கை கொடுக்கும் வீரராக வளர்ந்துள்ளார் தமிழகத்தைச்சேர்ந்த சாய்சுதர்சன். இந்தியாவிற்காக டெஸ்ட் கேப்பை பெற்றிருக்கும் சாய் சுதர்சன், 3 வடிவ வீரராக வளரவேண்டும் என்ற வேட்கையுடன் இருந்துவருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் அவர், கவுதம் கம்பீர் தன்மீது நம்பிக்கை வைத்து தன்னை பேக் செய்வதாகவும், அது தன் திறமையை வெளிக்கொண்டுவர பெரிதும் உதவுவதாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய ஃபெயிலர்களில் அதிகம் ரஜினியின் இந்த பாடல் ஒன்றை தான் கேட்பேன் என்றும் கூறியுள்ளார்.

Sai Sudharsan criticism

கோபிநாத் உடனான உரையாடலில் பேசியிருக்கும் அவர், ’தன்னுடைய நாளை தொடங்குவதற்கு முன்பு என்ன செய்யவேண்டும் என்பதையும், நாள் முடிந்தபிறகு நினைத்ததை செய்தோமா, அதைப்பொறுத்து இன்று என்ன ரிசல்ட் கிடைத்தது என்பதையும் எழுதிவைத்து அதிலிருந்து உத்வேகம் பெருவதாகவும் கூறினார். மேலும் அப்படி எழுதும் போது பழைய பாடல்களை மெல்லிய ஒலியில் இசைக்கவிட்டு கேட்பேன் என்றும், தற்போது அதிகமாக கோடைக்கால காற்றே பாடலை அதிகமாக கேட்கிறேன் என்றும் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் தன்னை ரஜினிகாந்தின் ரசிகராக அறிமுகப்படுத்திய அவர், ரஜினியின் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உலகம் ஒருவனுக்கா’ என்ற பாடலை அடிக்கடி தன்னுடன் தொடர்புபடுத்திக்கொள்வேன் என்று கூறினார். அந்த பாடலில் இடம்பெற்றுள்ள ‘பாதி வழியில் பறவை பறக்க மறக்காதே’ என்ற வரிகள் தன்மீதும் தன் திறமைமீதும் சந்தேகம் வரும்போதெல்லாம் விடையாக இருப்பதாகவும் கூறினார்.